முகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி
பரனூர் சுங்கசாவடியில் பணம் திருடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
Recommended Video
செங்கல்பட்டு: யார் என்று தெரியவில்லை.. பரனூர் செங்கல்பட்டு டோல்கேட் ஆபீசுக்குள் மர்மநபர் ஒருவர் முகத்தை கர்சீப்பால் கட்டிக் கொண்டு உள்ளே நுழைந்து... லாக்கரில் பணத்தை கொள்ளையடிக்கிறார்.. அங்கிருக்கும் கம்ப்யூட்டரை தூக்கி போட்டு உடைக்கிறார்.. பணத்தை கொஞ்சம் சிதறி வீசுகிறார்.. இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கடந்த 26-ந்தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு கோயம்பேட்டில் இருந்து நெல்லைக்கு ஒரு அரசு பஸ் சென்றது.. பரனூர் டோல்கேட்டில் பஸ் டிரைவர் நாராயணனிடம் வட மாநில ஊழியர்கள் கட்டணம் கேட்க, பாஸ்டேக்கில் ஏற்கனவே கட்டணம் கட்டிவிட்டேன் என்று டிரைவர் பதிலளித்துள்ளார். இதுதான் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மோதலாக வெடித்தது... டிரைவரிடம் எல்லைமீறி பேசியுள்ளனர் ஊழியர்கள்.. அப்போது கூட பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை எச்சரித்து, கண்டித்திருக்கிறார்கள்.

ஆனாலும் வட மாநில ஊழியர்கள் சிலர் டிரைவரை தாக்கியதாக தெரிகிறது. அவ்வளவுதான்.. கொந்தளித்து விட்டனர் அரசு பஸ் ஊழியர்களும், மக்களும். அத்தனை பேரும் சேர்ந்து டோல்கேட்டை துவம்சம் செய்து விட்டனர். டோல்கேட்டையும் அடித்து நொறுக்கி சின்னாபின்னமாக்கி விட்டனர். இதை பார்த்து மிரண்டு போன ஊழியர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த நிலையில், டோல்கேட் சூறையாடப்பட்டபோது அங்குள்ள 12 பூத்துக்கள், ஆபீசில் இருந்த ரூ.18 லட்சம் மாயமாகி உள்ளதாக சுங்கச்சாவடி பொறுப்பாளர் விஜயபாபு புகார் தந்தார். இதன் பேரில் விசாரணை நடத்தவும் போலீசார் இறங்கினர்.. டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை கொண்டு ஆய்வு நடத்தினர், அதில், பணம் எடுத்துச் செல்லும் நபரின் காட்சி பதிவாகி உள்ளது..
டோல்கேட் ஆபீசுக்குள் முகத்தை மறைத்தபடி ஒரு இளைஞர் செல்கிறார்... அங்கிருக்கும் கம்ப்யூட்டரை தூக்கி போட்டு உடைத்துவிட்டு... லாக்கரில் இருந்த பணத்தை எடுக்கிறார்.. அதை தான் கொண்டுவந்த பையில் வைத்து திணித்து கிளம்புகிறார். பணம் கொள்ளையடிக்கப்பட்டது போன்று நம்பவைக்க, அதில் இருந்த சில கட்டுப் பணத்தை அந்த ரூமுக்குள் இறைத்து சிதற விடுகிறார்.. எது எல்லாமே அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சியை கண்டால், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொள்ளை என்றே தெரிகிறது.. இல்லையென்றால், பணம் இருக்குமிடம் அந்த பரபரப்பில் மர்மநபருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. ஒருவேளை அந்த டோல்கேட்டில் வேலை பார்த்த நபராகக்கூட இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகிறது.. முகத்தை கர்சீப்பால் கட்டிக் கொண்டு வந்து கொள்ளையடித்து மர்ம நபர் யார் என்று போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications