காஞ்சி வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.. பலத்த பாதுகாப்புக்கிடையே அத்திவரதரை தரிசித்தார்
காஞ்சிபுரம்: இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.
அத்திவரதர் தரிசனத்திற்காக காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்து சென்றனர்.

அத்திவதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் வந்ததால் பக்தர்களுக்கு தரிசம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் வைபவம் கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் சராசரியாக சுமார் 1 லட்சம் பேர் வரை வந்து அத்திவரதரை தரிசித்து விட்டு செல்கின்றனர். அத்திரவரதர் உற்சவம் தொடங்கி இன்றுடன் 12 நாட்கள் ஆகிறது. இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
அலைகடலென கூட்டம் திரள்வதை அடுத்து கோயிலை சுற்றி மற்றும் காஞ்சி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையேஅத்தி வரதரை தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை 3 மணியளவில் அத்திவரதரை தரிசிக்க காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார். காவி உடையில் இன்று காட்சி தரும் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்தார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு காலை 10 மணி முதல் மேற்கு கோபுரம் வழியாக விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணிக்குப் பின்னர் தான் விஐபி தரிசனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் தரிசனத்திற்காக கிழக்கு கோபுர வாசல் 1 மணி வரை திறந்திருந்தது அதன் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்னு அனுமதிக்கப்படவில்லை. ஜனாதிபதி வருகையொட்டி 2 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 2,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications