காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அஞ்சு வருஷமா நீ இன்னா செஞ்சே.. இன்னாத்துக்கு இப்போ வர்ற.. எகிறி பாய்ந்த மக்கள்.. பதறி போன மரகதம்

வாக்கு சேகரிக்க சென்ற எம்பி மரகதம் குமரவேலை கிராம மக்கள் விரட்டி அடித்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    MP Maragatham Kumaravel: எம்.பியிடம் எகிறி பாய்ந்த மக்கள்.. பதறி போன மரகதம்- வீடியோ

    காஞ்சிபுரம்: "ஏம்மா.. எதுக்கு இங்க வர்றே.. 5 வருஷமா நீ எங்களுக்கு இன்னா செஞ்சே" என்று பொதுமக்கள் வழிமறித்து கேள்வி கேட்டே காஞ்சிபுரம் அதிமுக எம்பியை விரட்டி அடித்திருக்கிறார்கள்.

    அதிமுக சார்பில் சிட்டிங் எம்பி மரகதம் குமாரவேல் நிற்கிறார். இவரது குடும்ப ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளே தொகுதியில் பெரிய மைனஸ் என்று சொல்லப்படுகிறது. மேலும் உள்ளூர் கட்சிக்காரர்களை அரவணைத்து செல்லாததும் அடுத்த மைனஸ்தான்! இதனால் இவர் மீது மக்களுக்கு பரவலான அதிருப்தி இருந்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று செய்யூர் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு மரகதம் வந்தார். பிரச்சார வேன் நடுரோட்டில் வந்து கொண்டிருந்தது.. அதை பார்த்ததும் சுற்றியிருந்த பொதுமக்கள் ஒன்றுகூடி திரண்டார்கள். வேனுக்கு நடுவே ஓடிவந்து வழிமறித்து கொண்டார்கள்.

    வன்னியர்களுக்கு தர்மபுரியில் ஒரு தர்ம சங்கட சவால்... 3 வேட்பாளர்கள்... வாக்குகளை அள்ளப் போவது யார்? வன்னியர்களுக்கு தர்மபுரியில் ஒரு தர்ம சங்கட சவால்... 3 வேட்பாளர்கள்... வாக்குகளை அள்ளப் போவது யார்?

    எம்பி மரகதம்

    எம்பி மரகதம்

    வேனில் எம்பி மரகதம் நின்றிருக்க, அவருடன் இருந்த மக்கள் அதிமுக அரசின் சாதனைகளை மைக்கில் விளக்கி கொண்டிருந்தார். அப்போது குவிந்து நின்ற மக்களை பார்த்ததும் திகைத்து போய்விட்டார் எம்பி.

    ரோடு போட்டோம்

    ரோடு போட்டோம்

    "எதுக்கு இங்க வந்திருக்கேம்மா.. 5 வருஷத்துக்கு முன்னாடி ஜெயித்து வந்த நீ எங்களுக்கு இதுவரைக்கும் இன்னா செஞ்சே? என்றனர். அதற்கு மைக்கில் பேசியவர், "ஏம்மா.. உங்களுக்கெல்லாம் ரோடு போட்டு தந்திருக்கோமே" என்றார்.

    பாஜகவிற்கு கஷ்டம்.. காங்கிரஸ் நிலை என்ன தெரியுமா?.. அசத்தல் சர்வே இதோ!

    100 நாள் வேலை

    100 நாள் வேலை

    அதற்கு மக்கள் "ரோடு போட்டு குடுத்தா, அது என்ன எங்களுக்குன்னு நீயா போட்டே? ஏழைங்களுக்கு 100 நாள் வேலைன்னு சொல்றீங்களே.. நீங்க இன்னா செய்துக்கிறீங்க? ரெட்டை இலைன்னு வர்றீங்க.. ஆனா ஏழைகளுக்கு இன்னா செய்துக்கறே?"

    6 தொகுதிகள்

    6 தொகுதிகள்

    நிலைமை சரியில்லாமல் போவதை பார்த்த எம்பி, உடனே மைக்கை பிடுங்கி, "இந்த பகுதிக்கு வந்து, லைட்டு குடுத்திருக்கேன், சாலைகளை போட்டு குடுத்திருக்கேன். வருஷத்துக்கு ஒரு எம்பிக்கு 5 கோடிதான் ஒதுக்குவாங்க.. ஆனா எனக்கு 6 சட்டமன்ற தொகுதி இருக்கு. நான் ஒன்னும் உள்ளாட்சி தலைவரோ, கவுன்சிலரோ கிடையாது.

    ஸ்டே ஆர்டர்

    ஸ்டே ஆர்டர்

    இவங்கதான் செய்யணும். உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாம பண்றது திமுகதான். கோர்ட்டுல போய்ட்டு அவங்க ஸ்டே ஆர்டர் வாங்கிட்டாங்க. இதையடுத்து எம்பி பேசி முடித்த அடுத்த செகண்டே வேன் கூட்டத்துக்கு இடையே புகுந்து கிளம்பியது. மக்கள் அப்போதும் விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டே இருந்தனர்.

    கேள்விகள்

    கேள்விகள்

    இன்னொரு விஷயம், இப்படி எம்பியை விரட்ட விரட்ட கேள்விகளை கேட்டவர்களில் பெரும்பாலும் வயதான தாத்தா, பாட்டிகள்தான். இளைஞர்கள் கூட்டம் என்றால்கூட ஏதோ எதிர்த்து கேள்விகளை கேட்பார்கள், அது எதிர்க்கட்சிகளின் சதி என்று கூட சமாளித்து விடலாம். ஆனால் வயதானவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் 5 வருடம் ஏமாந்து போனதினால் வந்த அடிவயிற்று வயிற்றெரிச்சல்கள் என்றுதான் தெரிந்தது!

    English summary
    Public questions raised against Kanchipuram MP Maragatham Kumaravel for campaigning near Seyyur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X