துர்கா ஸ்டாலினை தொடர்ந்து ... அத்திவரதரை காண காஞ்சிபுரம் வந்த ராஜாத்தி அம்மாள்.. மனமுருக தரிசனம்!
அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வருகை தந்திருந்தார் ராஜாத்தி அம்மாள்
Recommended Video
காஞ்சிபுரம்: திமுக எம்பி கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காஞ்சிபுரம் வருகை தந்து, அத்திவரதரை தரிசனம் செய்தார்.
அத்திவரதர் விழாவால் காஞ்சிபுரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தினந்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்து கொண்டே இருக்கிறார்கள்.
சென்ற வாரம் அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்திருந்தார். சிறப்பு தரிசனம் செய்த அவர், பச்சை நிற பட்டுபுடவையை சாத்தி அத்திவரதரை தரிசித்து விட்டு சென்றார்.

துர்கா ஸ்டாலின்
இந்நிலையில், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் துணைவியாரும், கனிமொழியின் அம்மாவுமான ராஜாத்தி அம்மாள் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகை தந்தார். கருணாநிதியை போலவே கனிமொழியும் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருப்பவர்.

கனிமொழி
ஆனால் ராஜாத்தி அம்மாள் அப்படி கிடையாது. தனது மகள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு சென்றவர். அந்த அளவுக்கு கடவுளை மனதார வேண்டுபவர்.

காஞ்சிபுரம்
இன்று காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வந்திருந்தார். வயோதிகம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் தயாளு அம்மாளைதான் வீல் சேரில் ஓரிரு சமயம் நம்மால் காண முடிந்தது. ஆனால் தற்போது ராஜாத்தி அம்மாளும் வீல் சேரில் கோயிலுக்கு வந்திருந்தார். அவரை குடும்ப உறுப்பினர்கள் அழைத்து வந்திருந்தனர். அத்திவரதரை தரிசித்த ராஜாத்தி அம்மாள் உடன் வந்தவர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்

விஐபிக்கள்
அத்திவரதரைக் காண ஏகப்பட்ட அரசியல் புள்ளிகள் குடும்பம் குடும்பமாக வருகின்றனர். இதில் தேசியம், திராவிடம் என்று எதுவும் பாரபட்சம் இல்லை. சமீபத்தில் விஜயகாந்த் குடும்பத்தினர், மொத்தமாக வந்து சாமி கும்பிட்டு விட்டுப் போனார்கள். இப்போது கருணாநிதி குடும்பத்திலிருந்து 2வது முக்கியஸ்தர் வந்து போயுள்ளார். தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளனர் அரசியல் விஐபிகளும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications