Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்த 32 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு - அதிகாரிகள் நடவடிக்கை

ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர். 32 ஏக்கர் நிலத்தை நீண்ட காலமாக அக்கிரமித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ராஜம் ஓட்டல்ஸ் நிறுவனம், 'குயின்ஸ்லேண்ட்' என்ற பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சொகுசு விடுதியை நடத்தி வருகிறது.

Recovery of 32 acres of temple land occupied by the Queensland amusement park

கடந்த 1998ஆம் ஆண்டுடன் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், அந்த நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததையடுத்து, ரூ.2 கோடியே 75 லட்சத்து 46 ஆயிரத்து 748 இழப்பீடாக செலுத்தும்படி குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் கடந்த 2013ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து குயின்ஸ்லேண்ட் நிர்வாகம் தரப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் வக்கீல் அருண் நடராஜனும், வருவாய்த்துறை சார்பில் வக்கீல் அமிர்தா தினகரனும் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "கோவில் நிலம் 21.06 ஏக்கர் நிலம் கடந்த 1995-1998 வரை செல்வராஜ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

இடையில் இந்த நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு ஆவணம் இல்லை என்று கூறி வருவாய்த்துறையினர் கோவில் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்துள்ளனர். அதை பயன்படுத்திக்கொண்டு குத்தகைக்காலம் முடிவடைந்த பிறகும் குயின்ஸ்லேண்ட் நிறுவனம் சட்டவிரோதமாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்று வாதிட்டனர்.

இதையடுத்து நீதிபதி, குயின்ஸ்லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவில் நிலங்களை 4 வாரங்களில் மீட்க வேண்டும். அந்த நிறுவனம் வருவாய்த்துறைக்கு 1 கோடியே 8 லட்சத்து 69 ஆயிரத்து 423 ரூபாயையும், அதேபோல் கோயிலுக்கு 9.5 கோடி ரூபாயையும் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஜமீன்தார்களாக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு பூஜைகள், முறைகள் செய்ய 177 ஏக்கர் இடத்தை 1884ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளனர். அதனை நானும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் ஆய்வு செய்தோம். இந்த இடத்தை மீட்டெடுக்க இந்து சமய அறநிலையத்துறை வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று கூறினார்.

இந்த நிலையில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்றைய தினம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்றைய தினம் மீட்கப்பட்டது. ரூ.200 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

நீதிமன்ற வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலுள்ள குயின்ஸ்லாந்து எனும் தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 200கோடி மதிப்பிலான 32.41 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னிலையில் இன்று அதிரடியாக மீட்டெடுத்து அரசு நிலம் மீட்கப்பட்டது குறித்த அறிவிப்பு பலகையினை வைத்தனர்.

குறிப்பாக இன்று வருவாய்த்துறையினரால் மீட்டெடுக்கப்பட்ட அரசு நிலத்தில் குயின்ஸ்லாந்து நிருவனம் ரோப் கார், புட் கோர்ட், போட் ஹவுஸ்,நீச்சல் குளம் உள்ளிட்ட இடங்களாக மாற்றி அமைத்து பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளதை அவ்விடத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+