பேட்டரியை எடுக்க வாக்கு இயந்திரங்களின் சீலை உடைத்த அதிகாரிகள்.. அரசியல் கட்சியினர் வாக்குவாதம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 2 வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரங்களின் சீல் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட காவான்தண்டலம் மற்றும் வயலூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும், கட்சி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்கு இந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு மையத்தை விட்டு கட்சி முகவர்கள் வெளியேறியதும், தேர்தல் அலுவலர்கள் வாக்கு இயந்திரங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றியுள்ளனர். இத்தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு தேர்தல் அலுலவர்களுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்,
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள பேட்டரியை எடுக்காமல் இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து பேட்டரியை எடுக்க முயற்சித்து வேகமாக இழுத்த போது, ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சீல் சிறிது அகன்று விட்டது என்றார்.
பேட்டரியை எடுத்த பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் கூறினார். ஆட்சியரின் விளக்கத்தை அடுத்து அப்பகுதியில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications