Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவனின் விசிக கட்சியை விட ஆர்எஸ்எஸ் ஒழுக்கமானது.. வாண்ட்டடாக வம்பிழுக்கும் எஸ்.வி.சேகர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: நான் அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என காஞ்சிபுரத்தில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 11 ஆவது தேசிய இசை திருவிழாவில் கலந்து கொண்டு இசை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவில் நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

S.V.Sekhar denies he is not directly attacking Annamalai at any cost

அப்போது எஸ்.வி.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நான் எனது ட்விட்டரில் அண்ணாமலை குறித்து நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனக்கு தோன்றும் விஷயங்களை நகைச்சுவையாக பதிவு செய்து வருகிறேன். ஒருவரை நான் புத்திசாலி என சொல்வதால் மற்றவர்கள் முட்டாள் என பொருள் கொள்ள கூடாது.

நான் போட்ட பதிவிற்கு உள்ளே சென்று குதர்க்கமாக கேள்வி கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை. நான் நீங்கள் கேட்பது போல் யோசித்து எதையும் போடவில்லை. சமூகவலைதளங்களில் வரும் நகைச்சுவைகளை வேறு யாருடனாவது பொருத்தி பார்த்தல் கூடாது. நான் பாஜக ஆதரவாளர், பிரதமர் நரேந்திர மோடி வரும் 2024 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

S.V.Sekhar denies he is not directly attacking Annamalai at any cost

நான் கவுன்சிலர் பதவி கேட்டோ எம்எல்ஏ பதவி கேட்டோ பாஜகவில் இணையவில்லை. அனைவருக்கு் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளது. அப்படி தரங்கெட்டு விமர்சிப்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன். ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவது மிகவும் சிறப்பான ஒன்று. தேவையானது.

உலகில் சேவைக்கு சிறந்தது ரெட் கிராஸ் என்றால் ரெட் கிராஸுக்கு இணையான சேவையை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் மட்டுமே கொடுத்து வருகிறது. புயலோ வெள்ளமோ கொரோனாவோ எது வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான் முதலில் சேவை செய்ய முன் வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கொடி கம்பு கொண்டு வரக் கூடாது என காவல் துறை கட்டுப்பாடு விதிக்கிறது. திருமாவளவன் ஊர்வலத்தில் கொடி கம்போடுதான் வருகிறார்கள். அந்த கட்சியை விட ஒழுக்கமானது ஆர்எஸ்எஸ்.

S.V.Sekhar denies he is not directly attacking Annamalai at any cost

ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கும் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என சிலர் கேட்கிறார்கள். அது இந்தியாவில் செய்யவே முடியாது. உச்சநீதிமன்றம் வரை போய் ஆர்எஸ்எஸ் ஜெயித்து இருக்கிறது என்றால் அதுவரைக்கும் எதிர்த்து நின்றவர்கள் அவமானப்பட வேண்டிய விஷயம். நாம தப்பு பண்ணிவிட்டோம், என்று அவமானப்பட வேண்டும். இவ்வாறு நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

எஸ் வி சேகர் அண்மைக்காலமாக ஒரு கதையை யார் பெயரையும் குறிப்பிடாமல் சொல்கிறார்கள். ஆனால் அதை நெட்டிசன்கள் பாஜக அண்ணாமலையுடன் பொருத்தி பார்க்கிறார்கள். இந்த ட்வீட்டில் என்னங்க அந்த பையன் பாஸ் பண்ண வாய்ப்பே இல்லயே.
ஏங்க இன்னிக்கு கேள்வி பேப்பர் குடுத்தா அடுத்த வாரம்தான் பதில் சொல்லுவேங்கிறான் என எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார். அதாவது பாஜக அண்ணாமலையிடம் திமுக கேள்வி எழுப்பினால் அதற்கு அவர் அடுத்தவாரம்தான் பதில் சொல்வார் என்பதை போன்ற அர்த்தம் இவரது காமெடியுடன் பொருந்துகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+