"குளம் வேண்டாம்.. கோயிலே போதும்.. காஞ்சிபுரமும் திருப்பதியாக மாறும்.. கனவில் தோன்றிய அத்திவரதர்"
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: குளம் வேண்டாம், கோயிலே போதும் என கனவில் வந்து அத்திவரதர் கூறியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ கோயிலில் அத்திவரதர் வைபவம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டு அந்த வைபவம் நடந்து வருகிறது. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த விழாவில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இங்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் கூடி வருவதால் போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீண்ட தூரம் காத்திருந்து தரிசனம் செய்து வருவதால் முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது.

யோசனை
இதனால் கிழக்கு கோபுரத்தில் இருந்து நேரடியாக சுவாமியை பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் அத்திவரதரை வசந்த மண்டபத்திலிருந்து வெளியே கொண்டு வர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யோசனை தெரிவித்துள்ளார்.

கோரிக்கை
இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ஜீயர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஜீயர்கள் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்போம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கனவில் தோன்றிய அத்திவரதர்
இதுகுறித்து அவர் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு 5 நிமிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அத்திவரதரை மீண்டும் பூமிக்குள் வைக்க வேண்டாம் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை. சித்த புருஷன் 96 வயது நிரம்பிய ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் கனவில் அத்திவரதர் தோன்றியுள்ளார்.

சம்மதம்
அப்போது அத்திவரதர் கூறுகையில் மறுபடியும் என்னை ஜலாடிவாரத்துக்கு கொண்டு போய்விடாதே என அத்திவரதரே கூறியதாக எங்களிடம் சுவாமிகள் தெரிவித்தார். இது தொடர்பாக நாங்கள் மடாதிபதிகளிடம் பேசி வருகிறோம். இதில் 2, 3 மடாதிபதிகள் எங்கள் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

சம்மதம்
இதுபோல் அனைத்து மடாதிபதிகளும் இதற்கு நிச்சயம் சம்மதம் தெரிவிப்பர் என கிருஷ்ண பிரேமி சுவாமிகள் தெரிவித்தார். இவர் தினமும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசக் கூடியவர். அவரது கனவில் அத்திவரதர் தோன்றி கூறிய விஷயங்களை நான் இந்த உலகத்துக்கு சொல்லியுள்ளேன்.

உலகம்
இதுபோல் அனைத்து மடாதிபதிகளும் இதற்கு நிச்சயம் சம்மதம் தெரிவிப்பர் என கிருஷ்ண பிரேமி சுவாமிகள் தெரிவித்தார். இவர் தினமும் ஸ்ரீகிருஷ்ணனிடம் பேசக் கூடியவர். அவரது கனவில் அத்திவரதர் தோன்றி கூறிய விஷயங்களை நான் இந்த உலகத்துக்கு சொல்லிவுள்ளேன்.

மடாதிபதிகள்
அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பூமிக்கடியில்தான் இருக்க வேண்டும் என்ற ஆகமவிதிகள் ஏதும் இல்லை என கிருஷ்ண பிரேமி கூறியுள்ளார். அத்திவரதர் மீண்டும் குளத்துக்கு செல்ல வேண்டுமா வேண்டாமா என்பதை காஞ்சிபுரம் உள்பட அனைத்து இடங்களில் உள்ள ஆச்சாரிய சுவாமிகள், ஜீயர்கள், அர்ச்சகர்கள், மடாதிபதிகள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

திருப்பதி
அத்திவரதர் மீண்டும் பூமிக்குள் செல்லாமல் இருந்தால் காஞ்சிபுரமும் இன்னொரு திருப்பதியாக மாறும் என அத்திவரதர் கிருஷ்ண பிரேமி சுவாமிகளிடம் தெரிவித்துள்ளார் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications