காஞ்சிபுரத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம்! போலீஸார் குவிப்பு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் ஊழியர்கள் போட்டி கடிதத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் தொழிற்சாலை. இங்கு பணிபுரியும் ஒரு பிரிவினர் சிஐடியூ தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து அக். 21 முதல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் ஜனவரி 25 இல் சாம்சங் இந்திய தொழிலாளர்கள் சங்கம் அங்கீகரிக்கப்பட்டதாக தொழிலாளர் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் போட்டி கடிதத்துடன் சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாம்சங் நிறுவனத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஊழியர்கள் 23 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள், வேலை கேட்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications