ஆண் குழந்தைக்கு ‘வெண்ணிலா’ என பெயர் சூட்டிய சீமான்.. அதிர்ந்த பெற்றோர்.. கனகாம்பரத்தால் கன்ஃப்யூஷன்!?
காஞ்சிபுரம் : நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், பெயர் வைக்கச் சொல்லி கொடுத்த ஆண் குழந்தைக்கு 'வெண்ணிலா' என சீமான் பெயர் வைத்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், பொதுமக்கள் அஞ்சுவதால் தமிழ்நாட்டில் எட்டு வழிச் சாலையும், பரந்தூர் விமான நிலையம் கட்டப்போவதுமில்லை, நாங்கள் கட்டவிடப் போவதும் இல்லை. மக்களின் கோரிக்கைகளை ஏற்று போராட்டங்களை அரசு கவனத்தை செலுத்தி தீர்வு காண்பதில்லை என விமர்சித்தார்.
சீமான் பேசிக்கொண்டிருந்தபொது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பதியர், தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் எனக் கேட்டு மேடையில் ஏறினர். பெயர் வைக்குமாறு பெற்றோர் கூறிய நிலையில், குழந்தையை பார்த்துவிட்டு சில நொடிகள் யோசித்த சீமான், அக்குழந்தைக்கு வெண்ணிலா என பெயர் சூட்டினார். இதையடுத்து, கூடியிருந்த நாதக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளருடைய குழந்தைக்கு "வெற்றி வேந்தன்" என்று அண்ணன் சீமான் பெயர் சூட்டினார்...
— மாறன் பாண்டியன் (@maaran_pandi) June 11, 2023
வாழ்வின் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ் செல்லமே 😍❤️ pic.twitter.com/VxW2zrafYy
அப்போது அதிர்ந்து போன குழந்தையின் தந்தை, சீமான் காதில், ஆண் குழந்தை எனச் சொன்னார். உடனே சீமானும் ஷாக் ஆகி பின்னர் சுதாரித்தார். "என்னது பையனா? பொண்ணா, பையனான்னே சொல்ல மாட்டேங்குறீங்க.:" என தனது ட்ரேட்மார்க் சிரிப்போடு கூறியவாறு, "வெற்றி வேந்தன் எனப் பெயர் சூட்டுகிறேன்" எனக் கூறிவிட்டு குழந்தையை கையில் வாங்கினார்.

ஆண் குழந்தைக்கு, பெற்றோர் கனகாம்பர பூவை தலையில் வைத்து தூக்கி வந்திருந்ததால் சீமான் கன்ஃபியூஸ் ஆகி ஆண் குழந்தைக்கு 'வெண்ணிலா' என பெயர் வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications