மை டியர் மச்சான் நீ மனசு.. டிக்-டாக் காதலிக்கு கன்னத்தில் பளார்! வீடியோவால் காலியான எஸ்.ஐ. வேலை!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் டிக்-டாக் பிரியா என்ற பெண்ணை சிறப்பு உதவி ஆய்வாளரான சோமசுந்தரம் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் தாயம்மன்குளத்தை சேர்ந்தவர் டிக்டாக் பிரியா. இவர் டிக்டாக்கில் நடித்தும், பேசியும் பல்வேறு பதிவுகளை அடிக்கடி பதிவிட்டு வந்ததால் அவருக்கு டிக்டாக் பிரியா என்று பெயர் உண்டானது. டிக்டாக் தடைக்குப் பிறகு அவர் இன்ஸ்டாகிராம், யூட்யூப் லைவ் என கடையை மாற்றிக் கொண்டார்.
இந்நிலையில் டிக்டாக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் பலருடன் தவறாக பழகிய பிரியா, பின்னர் சில மாதங்களில் பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் , இதனால் அவர் மீது காவல்நிலையங்களில் புகார்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

டிக்டாக் பிரியா
இந்நிலையில் காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவில் காவலராக பணியாற்றிய சோமசுந்தரம் என்பவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கும் பிரியாவுக்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சோமசுந்தரம், பிரியாவிற்கு காவல்துறையினர் மூலம் அடிக்கடி தொந்தரவு செய்துவந்ததாகவும், பிரியாவின் தம்பியை வழக்கு ஒன்றில் பிடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காவலர் மீது புகார்
இதனைத்தொடர்ந்து சோமசுந்தரத்தின் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு வந்ததால் அவரை உத்திரமேரூர் அடுத்த பெருநகர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளனர். இந்தநிலையில் சோமசுந்தரத்தின் தொந்தரவு தாங்கமுடியாத பிரியா அவரை தேடி பெருநகர் காவல்நிலையத்திற்கு வந்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் தகராறு செய்துள்ளார். அதனை வீடியோவும் எடுத்துள்ளார்.

பளார் என அடி
அப்போது ஆத்திரமடைந்த சோமசுந்தரம் அந்த பெண்ணை பளார் பளார் என்று அடித்து செல்போனை பறித்துக் கொண்டு விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தனது செல்போனை தர கோரி ஆடைகளை கழற்றி போராட்டம் செய்யப்போவதாக அந்தப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்நிலையமே பரபரப்பாக மாறியது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. முதலில் நடந்தது தெரியாமல் ஒரு பெண்ணை தாக்குவதா என கண்டனம் தெரிவித்தனர்.

பணியிட மாற்றம்
இதனிடையே, காஞ்சிபுரம் நகர காவல் நிலைய வளாகத்தில் பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியான நிலையில், பெருநகர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோமசுந்தரத்தை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications