காஞ்சி சாம்சங் ஊழியர்கள் ஸ்டிரைக்.. தென்கொரியாவிலிருந்து எழுந்த ஆதரவு! தீர்ப்பு எப்போது?
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவனத்தில், தொழிற்சங்கம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், சங்கம் அமைக்க முயன்ற தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தியிருக்கிறது. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தென் கொரியா நாட்டின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் இப்பகுதியில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம், சட்டத்துக்கு புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்நிறுவனத்தின் மீது எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் சேர்ந்து சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளனர். ஆனால், தொழிலாளர் நலத்துறை இதுவரை சங்கத்தை பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக சிஐடியு குற்றம்சாட்டியுள்ளது.
போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிஐடியு மட்டுமின்றி, ஏஐடியுசி, ஏ.ஐ.யு.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். எல்.டி.யு.சி உட்பட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இந்த பகுதியில் சிஐடியு தலைமை தாங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. அங்கெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. ஆனால் சாம்சங் நிறுவனம் மட்டும் தொடர்ந்து பிரச்னைகளை செய்து வருகிறது. காரணம் உழைப்பு சுரண்டல்தான்.
இதே சாம்சங் நிறுவனம் தென் கொரியாவில், ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும், இந்தியாவில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.
- தென் கொரியாவில் ஊழயர்களுக்கு மாதம் சம்பளம்: ரூ.4.5 லட்சம்-ரூ.6 லட்சம்
- இந்தியாவில் ஊழயர்களுக்கு மாதம் சம்பளம்: ரூ.30,000 - ரூ.45,000
- தென் கொரிய ஊழியர்களின் வேலை நேரம்: ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வீதம் வாரத்தில் 5 நாட்கள்
- இந்தியாவில் ஊழியர்களின் வேலை நேரம்: ஒரு நாளைக்கு 11 மணி நேரம் வீதம் வாரத்தில் 6 நாட்கள்
- தென் கொரிய ஊழியர்களின் உணவு இடைவேளை நேரம்: 1 மணி நேரம்
- இந்திய ஊழியர்களின் உணவு இடைவேளை நேரம்: 40 நிமிடங்கள்
- தென் கொரிய ஊழியர்களின் தேநீர் இடைவெளி நேரம்: 30 நிமிடங்கள்
- இந்திய ஊழியர்களின் தேநீர் இடைவெளி நேரம்: 20 நிமிடங்கள்
- தென் கொரிய ஊழியர்களுக்கு சலுகைகள்: 10 வருடம் பணியாற்றினால் வீடு கட்டி தரப்படும்
- இந்திய ஊழியர்களுக்கு சலுகைகள்: வீடு கட்ட கடன் உதவி கூட வழங்கப்படமாட்டாது என சிஐடியு மாநில செயலாளர் முத்துகுமார் கூறியுள்ளார்.
இந்நிலையில், காஞ்சி சாம்சங் தொழிலாளர் போராட்டத்திற்கு, தென் கொரியா நாட்டின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் ஆதரவு தெரிவித்திருக்கிறது. யூனியன் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,
“தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWD) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தம் சங்கத்தை அங்கீகரிப்பது, சம்பள உயர்வு வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது.
இது ஒவ்வொரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். உங்கள் சங்கத்தின் முதன் பொதுக்குழு கூட்டம் ஜூலை தேதி நடைபெற்றது என்று கேள்விபட்டோம். அதே தினத்தில் தாள் எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தம் கொரியாவில் தொடங்கியது. உங்கள் சங்கம் தொடங்கிய அன்றே எங்களுக்கு ஆதரவாக நீங்கள் திர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.
உங்கள் சங்கத்தின் பொதுக்குழுவும், எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தமும் ஒரே தினத்தில் தொடங்கியிருப்பது தற்செயல் ஆனதல்ல. நாம் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறோம். வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். நமது ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாம் உறுதி பூண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் தோழர்களாக இணைந்திருக்கிறோம்.
ஒரு சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எங்கு செயல்பட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பை அது பதித்து நடக்க வேண்டும். ஆனால், மிகவும் வருந்தத்தக்க வகையில் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை. நியாயமான வேலை நிலைமைகள் இல்லை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கமும், சிஐடியுவும் தலைமை தாங்கி நடத்துகிற இந்த வேலைநிறுத்தம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்படியான போராட்டம்.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த பிரச்சனையை நேர்மையாகவும், விரைவாகவும் தீர்த்து வைக்க வேண்டுமென்று கோருகிறோம். தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சங்கம் இல்லா கொள்கையை எதிர்க்கிறோம். இதே கொள்கையை இந்தியாவிலும் அந்த நிறுவனம் பின்பற்றுவதை கவலையோடு பார்க்கிறோம்.
சங்கம் இல்லா நிறுவனம் என்கிற நிர்வாக கொள்கை தொழிலாளர் விரோத கொள்கையாகும். அது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறது. அது கொரியாவில் பட்டுமின்றி உலகம் முழுவதும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும். இந்த கொள்கை தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்குகிறது. கார்ப்பரேட் லாபத்திற்காக தொழிலாளர்களின் குரல்களை புறக்கணிக்கிறது. இது காலாவதியாகிப்போன நிர்வாக அணுகுமுறையாகும். தொழிலாளிகளின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தாத நிறுவனம் வளராது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும், இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் அதன் கம்பெனிகளில் இந்த செவிமடுப்பு இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சியின் பொருட்டு பரஸ்பரம் வாமாக இருப்பதற்கான வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகளுக்கு வழியமைக்க வேண்டும் என்று நம்புகிறோம். சென்னை, சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க தலைமையிலான தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் மிக விரைவாக ஏற்கப்படும் என்று நம்புகிறோம்.
தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் உலகம் கம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும்போது அவர்களுக்கு எங்கள் ஒருமைப்பாட்டை தெரிவிப்போம். அவர்களுக்காக நாங்களும் இணைந்து தூய் கொடுப்போம். சிஐடியு மற்றும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications