மாறி மாறி ஸ்ரீபெரும்புதூரை வசம் செய்யும் கட்சிகள்.. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு?
Recommended Video

சென்னை: தமிழகத்தின் மிகப் பெரிய தொகுதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. இந்த தொகுதி 2009-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இதன் கீழ் கொண்டு வரப்பட்டன.
இந்த தொகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு எம்பியாக அதிமுகவை சேர்ந்த கே என் ராமசந்திரன் தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட இவருக்கு 63 வயதாகிறது. இவர் முதுகலை படிப்பு படித்துள்ளார்.
இவர் இதுவரை 26 முறை நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்றுள்ளார். தனிநபர் மசோதாக்கள் எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் 442 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பெண் வாக்காளர்கள்
இவரது வருகை பதிவு சதவீதமும் அந்தளவுக்கு மோசம் இல்லை. 73 சதவீதம் வருகை பதிவை பெற்றுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 19,46,503. இவற்றில் 982,862 பேர் ஆண் வாக்காளர்கள் ஆவர். பெண் வாக்காளர்கள் 963,641 ஆவர்.
வித்தியாசம்
வாக்குப் பதிவு சதவீதம் 66 ஆகும். இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகள் 545, 820 ஆகும். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திமுகவின் ஜெகத்ரட்சகன். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 1,02,646 ஆகும்.

அதிமுக
இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்புகளை பார்த்தோமேயானால் கடந்த 1962-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை திமுகவினரே வெற்றி பெற்றனர். பின்னர் 1977-ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்றது. பிறகு திமுக, காங்கிரஸ், அதிமுக என மாறி மாறி வெற்றி பெற்றனர்.

தேஜகூ
கடந்த 1999-ஆம் ஆண்டு 2014-ஆம் ஆண்டு திமுகவின் ஏ கிருஷ்ணசாமி இரு முறையும் டி ஆர் பாலு ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். 1998-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற அதிமுகவும் 1999-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திமுகவும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கூட்டணி அமைத்திருந்தன.

வெற்றி முடிவுகள்
மிகப் பெரிய தொகுதியான இதன் வெற்றி வாய்ப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொகுதியில் மாறி மாறி திமுக கூட்டணி, அதிமுக வெற்றி பெற்றதால் இந்த முறை வெற்றி முடிவுகள் மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications