கள்ளக்காதலில் இந்தியாவிலேயே ‛காஞ்சிபுரம்’ தான் முதலிடம்! டெல்லி, மும்பையை விட முந்தியது! இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே திருமணத்தை தாண்டிய கள்ள உறவில் அதிகம் ஈடுபடும் ஊர்களின் பட்டியலில் நம் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரை விட தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் முதலிடத்தை பிடித்துள்ளதாக Ashley Madison என்ற டேட்டிங் செயலி அதிர்ச்சி டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆங்காங்கே சிலர் திருமணத்தை தாண்டி கள்ளஉறவு வைத்துள்ளனர். இது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொருந்தும். உண்மையில் இது தங்களின் கணவர் மற்றும் மனைவிக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

kanchipuram illegal affairs

இதனால் பலரும் கள்ளஉறவை மிகவும் ரகசியமாக வைக்கின்றனர். இதுதவிர பலரும் செல்போன் செயலிகள் மூலம் பழகும் நபர்களுடன் கள்ளகாதல் வைத்து கொள்கின்றனர். இதுதவிர பல டேட்டிங் செயலிகள் மூலமாகவும் எதிர்பாலினத்தை சேர்ந்த நபர்களை பலரும் தேடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இதற்கு நம் நாடும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் Ashley Madison என்ற டேட்டிங் செயலி கடந்த ஜூன் மாதம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரம் என்பது திருமணத்தை தாண்டிய கள்ளஉறவுகளை தேடும் நபர்கள் அதிகம் உள்ள நகரங்கள் எது? என்பதை அடிப்படையாக கொண்டது. இந்த செயலியை எந்த பிராந்தியத்தில் இருந்து அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர்? அவர்களின் செயல்பாடு உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்த டேட்டா வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இருந்து தான் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் திருமணத்தை மீறிய கள்ளஉறவில் இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் காஞ்சிபுரம் 17 வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

நம் நாட்டில் டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் உள்பட பல முக்கிய மெட்ரோ நகரங்களில் டேட்டிங் அதிகரித்துள்ளது. ஆனால் அந்த நகரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதலிடம் பிடித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் தென்மேற்கு டெல்லி, 3வது இடத்தில் கிழக்கு, 4வது இடத்தில் தெற்கு டெல்லி, 5வது இடத்தில் மேற்கு டெல்லி, 6வது இடத்தில் வடமேற்கு டெல்லி உள்ளிட்டவை உள்ளன. இதுதவிர டெல்லி அருகே உள்ள கொரேகான், காசியாபாத், நொய்டாவின் கவுதம் புத்தா நகர் ஆகிய பகுதிகளிலும் இந்த செயலியை அதிகமானவர்கள் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டேட்டாவின் மூலம் முதல்தர நகரங்களை விட இரண்டாம் தர, 3ம் தர நகரங்களிலும் இந்த செயலி, முதல் தர நகரங்களை விட வேகமாக வளர்ச்சி காண்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக இந்த பட்டியலில் டாப் 20 நகரங்களில் மும்பை இடம்பெறவில்லை. மாறாக ஜெய்ப்பூர், சண்டிகர், ராய்கர் போன்ற 2ம் கட்ட இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+