ஸ்டாலினை ‛அங்கிள்' என அழைத்ததில் தவறு இல்லை.. விஜய்க்கு ஆதரவாக வந்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛நான் நிறைய முறை முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை. அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் நிஜமாகவே நேரில் பார்க்கும்போது குட் மார்னிங் அங்கிள்.. எப்படி இருக்கீங்க அங்கிள்.. என்று தான் சொல்வார். அதை தான் இப்போது பப்ளிக்கில் சொல்லி உள்ளதாக நான் பார்க்கிறேன்'' என்று திரைப்பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.

காஞ்சிபுரத்தில் திரைப்பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த மாநாட்டில் விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்துள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது:

there-is-nothing-wrong-in-calling-stalin-as-a-uncle-director-ks-ravikumar-support-to-vijay-speech

‛‛எனக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அனுபவமும் கிடையாது. ஆனால் விஜய் பேசியது தவறாக எனக்கு படவில்லை. ஏனென்றால் விஜய் நிஜமாகவே நேரில் பார்க்கும்போது குட் மார்னிங் அங்கிள்.. எப்படி இருக்கீங்க அங்கிள்.. என்று தான் சொல்வார். அதை தான் இப்போது பப்ளிக்கில் சொல்லி உள்ளதாக நான் பார்க்கிறேன்.

அதற்கு வேறு அர்த்தம் எடுத்து கொண்டு ஒரு குரூப் வேறு விதமாக பேசி வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்றை சொல்கிறேன். இந்த பிரச்சனையை விடுங்கள். நாட்டுக்கு எது நல்லதோ? அதை செய்தால் நல்லது என்று சொல்கிறேன். யாராக இருந்தாலும் சரி. நான் ‛ரெட் ஜெயண்ட்'டுக்கு 2 படம் பண்ணி இருக்கிறேன். ஆதவன், மன்மத அம்பு படங்களை பண்ணி இருக்கிறேன். அந்த சமயத்தில் ஸ்டாலின் சார் துணை முதல்வராக இருந்தார்.

அவரை நான் நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். அவர்களின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். அங்கிள் என்பது தப்பான வார்த்தை கிடையாது. விஜய் கெஞ்சம் Commericilise செய்து பேசியிருக்கிறார். அவருடைய ரசிகர்கள், அவருடைய கூட்டம் அங்கு இருந்தது. அவர்களை ஜாலிப்படுத்துவதற்காக அப்படி பேசியிருக்கலாம். அப்படி தான் நான் நினைக்கிறேன்.

இது குறை சொல்லும் வார்த்தையே கிடையாது. நான் இவரை (அருகில் இருப்பவரை கை காண்பித்து) அங்கிள்.. பாபு அங்கிள் என்று தான் சொல்வேன். அதில் என்ன தப்பு இருக்கிறது. தமிழில் மாமா என்று சொன்னால் கூட தப்பாகிவிடும். அப்படி அவர் (விஜய்) கூப்பிடவில்லை'' என கூறியுள்ளார். இதன்மூலம் நடிகர் விஜய், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்ததில் தவறு இல்லை என்று இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு கடந்த 21ம் தேதி மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டில் விஜய், முதல்வரை முக ஸ்டாலின் விமர்சனம் செய்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை ‛அங்கிள்' என சாடினார். இதுதொடர்பாக விஜய், "ஸ்டாலின் அங்கிள் - வெரி ராங் அங்கிள்.. மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள்" என பேசியிருந்தார்.

ஸ்டாலினின் இந்த பேச்சை திமுக தலைவர்கள் கண்டித்தனர். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் விமர்சனம் செய்தனர். தொலைக்காட்சிகளில் விஜயின் பேச்சு விவாதத்தை கிளப்பியது. இப்படியான சூழலில் தான் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து ஸ்டாலினை அங்கிள் என அழைத்ததில் தவறு இல்லை என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+