கார் கொடுக்கறதெல்லாம் இருக்கட்டும்.. கரூர் சம்பவம் பற்றி வாய் திறக்க தயங்குவது ஏன் விஜய்?
காஞ்சிபுரம்: கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு பிறகு வெளியில் தலை காட்டாமல் அமைதியாக இருந்த விஜய் தற்போது மீண்டும் அரசியல் களத்திற்கு வரத்தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் இன்று உரையாடினார். அதில் தங்களின் அரசியல் அஜென்டா தொடங்கி தற்குறிக்கான விளக்கம் வரை சொல்லி வழக்கம் போல பன்ச் வசனங்களை அள்ளி வீசினார். ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கரூர் பிரச்சனை குறித்து வாய் திறக்காமல் எஸ்கேப் ஆனது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கி வருடங்கள் ஆகிவிட்டன. 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அவர் கட்சி களமாடிக் கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி, மதுரை பகுதிகளில் மாநாடு, கோவையில் பூத் கமிட்டி கூட்டம், அம்பேத்கர் புத்தக வெளியீடு, ஆளுநருடன் சந்திப்பு, ஒரு போராட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடியவர்களை சந்தித்தது, 6 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் மட்டுமே தலையை காட்டியுள்ளார்.

விஜய் அரசியல் என்ட்ரி
தேர்தலை முன்னிட்டு அவர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு மேற்கொண்டு வந்தார். திருச்சி, பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து மக்கள் முன்பு உரையாடினார். கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்தபோது, திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் விக்கி 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமான மக்கள் காயமடைந்தனர்.
தன்னை காண வந்த மக்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாமல், செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலும் சொல்லாமல் விஜய் அன்றைய தினமே சென்னை சென்றார். கரூர் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் வரை விஜய் மற்றும் தவெகவினர் வெளியில் தலை காட்டவில்லை. மொத்த கட்சியும் தலைமறைவானதாக விமர்சனம் எழுந்தது. விஜய் மட்டுமல்ல, தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவர் கூட கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை.
காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு
பாதிக்கப்பட்ட மக்களை சென்னை அழைத்து வந்து விஜய் நேரில் சந்தித்தார். அவரின் இந்த செயலும் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் விஜய் விரைவில் மீண்டும் மாவட்ட வாரியாக பயணம் செய்து மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாடும் இன்று நிகழ்வு நடைபெற்றது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விஜய் எடுத்துரைத்தார். தமிழ்நாட்டிற்கான தங்களின் செயல்திட்டங்கள் குறித்தும் விஜய் பேசினார். தொடர்ந்து பேசிய விஜய், நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்தான விமர்சனத்திற்கு பதில் அளித்தார்.
கரூர் பற்றி நோ கருத்து
தவெகவினரை தற்குறி என்றழைப்பதற்கும் அவர் நீண்ட பதிலடி கொடுத்தார். 2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து மக்களுக்கும் வீடு, கார், பட்டப்படிப்பு கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை உள்ளிட்ட பலவற்றை பேசினார். "மற்றவர்களை போல அடித்து விடவில்லை. விஜய் சும்மா எதுவும் சொல்ல மாட்டான். சொன்னால் அதை செய்யாமல் விட மாட்டான்." என்று பேசினார்.
ஜனநாயகன் பாடல் போல 'பிளாஸ்ட்.. பிளாஸ்ட்' என்ற வாசகத்தை பேசி வழக்கம் போல 'நண்பி.. நண்பா..', 'நெஞ்சில் குடியிருக்கும்..' என்ற டெம்ப்ளேட் வசனங்களை அள்ளி வீசினார். ஆனால் நாடே அதிர்ந்து போன கரூர் சம்பவத்தை பற்றி அவர் பேசவில்லை. காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு உரையின்போது, "கரூர் பிரச்சனை குறித்து நான் பேசுவேன்னு நினைச்சுருப்பாங்க. அதைப்பத்தி நான் அப்பறம் பேசறேன்." என்றவர் கடைசி வரை அதுகுறித்து வாய் திறக்காதது மீண்டும் விமர்சனமாகியுள்ளது.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications