ஆரஞ்ச், ஊதா நிறத்தில் பட்டாடை அணிந்த அத்திவரதரை குடும்பம் சகிதமாக தரிசித்த "கள்ளழகர்"
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார்.
உலக பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலாகும். அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளிய அத்திவரதர் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனந்தசயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.
அருளை வாரி வழங்கும் அத்திவரதர் என்பதாலும் இப்போது விட்டால் இத்தோடு 40 ஆண்டுகள் கழித்துதான் பார்க்க முடியும் என்பதாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பக்தர்கள்
கடந்த 10 நாட்களில் 10 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

வாசலில் படுக்கை
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரதனின் அருளுக்காக காத்துக் கிடக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் வெளியூர் மக்கள் இரவே வந்து கோயில் வாசலில் படுத்து உறங்குகின்றனர்.

அத்திவரதர்
பின்னர் காலை 5 மணிக்கு தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புகின்றனர். அத்திவரதரை தரிசிக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

தரிசனம்
இந்த நிலையில் இன்றைய தினம் அத்திவரதர் ஆரஞ்சு நிறத்தில் உடையும் ஊதா நிற பார்டரில் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தார். அவரை தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன், சுதீஷின் மனைவி ஆகியோர் தரிசனம் செய்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications