துர்கா ஸ்டாலின் உதவியாளர்னு சுற்றியவர்.. அரிவாளால் அருணாவை வெட்ட பாய்ந்த கணவர்.. என்னாச்சு?
அரிவாளால் மனைவியை வெட்ட முயன்ற கணவரிடம் விசாரணை நடக்கிறது
காஞ்சிபுரம்: மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து வெட்ட பாய்ந்த கணவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் போலீசார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே சின்னாலம்பாடி ஊராட்சியில் வசித்து வருபவர் ரவி... இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்...
இவருக்கு 2 மனைவிகள்.. இரண்டாவது மனைவி பெயர்அருணா.. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கணவர் ரவி
இந்நிலையில், அருணாவுடனும் தகராறு செய்ய ஆரம்பித்துள்ளார் ரவி.. தினம் தினம் பிரச்சனை செய்யவும், வெறுப்படைந்த அருணா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால், அம்மா வீட்டிலேயே இருப்பதால் பிள்ளைகளின் படிப்பு பாழாவதாக நினைத்தார்.. எனவே பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மறுபடியும், சின்னாலம்பாடியில் உள்ள ரவி வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார்.. அதற்கு முன்பாக, சாலவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார் அருணா..

ஆத்திரம்
கணவன் வீட்டுக்கு செல்வதால், அங்கு ஏதெனும் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு கணவர் ரவியும் அவருடைய முதல் மனைவியும்தான் தான் காரணம் என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் தந்தார்.. அதற்கு பிறகு குழந்தைகளை அழைத்து கொண்டு, கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.. கூடவே சில உறவினர்களையும் அழைத்து சென்றுள்ளார்.. போலீஸ் ஸ்டேஷனில் எழுதி கொடுத்து விட்டு வந்திருப்பதை அறிந்த ரவி, ஆத்திரமடைந்தார்..

துர்கா ஸ்டாலின்
அரிவாளை எடுத்து கொண்டு அருணாவை வெட்ட பாய்ந்தார்.. ஆனால், அதற்குள் அருணாவின் சகோதரர் குறுக்கே ஓடிவந்து தடுத்துவிட்டார். இதில், அருணாவுக்கும் அவரது சகோதரருக்கும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. இந்த வீடியோதான் இணையத்தில் வைலாகி கொண்டிருக்கிறது... இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது..

விசாரணை
சம்பந்தப்பட்ட ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் உதவியாளர் என்று கூறிக் கொண்டு பல இடங்களில் தொடர்ச்சியாக மோசடி செய்து வருகிறாராம்.. இதை அருணாவே போலீஸில் தெரிவித்துள்ளார்.. பாதுகாப்பு வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட போலீசில் கேட்டும், எந்த பாதுகாப்பும் தனக்கு அளிக்கவில்லை என்றும், அதனால், மாவட்ட எஸ்பியையே நேரில் சந்தித்து மனு அளித்ததாகவும் அருணா கூறியுள்ளார்.. இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications