ஸ்ரீபெரும்புதூர் சிறுமி மாயம்! தாய்தான் காரணம்! சாப்பாட்டுக்கே கஷ்டம்! பக்கத்து வீட்டு பெண் பகீர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 8 வயது சிறுமி காணாமல் சம்பவத்தில் அவரது தாய் மீது அக்கம்பக்கத்தினர் குறை சொல்கிறார்கள். அந்த குழந்தைதான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் என்றும் சாப்பாட்டுக்கே கஷ்டம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஜார்க்கண்ட் சிறுமியின் வீட்டருக்கே வசிக்கும் பெண் ஒருவர் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை (அக்.16) மாலை 4 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் வட மாநில இளைஞர்கள் பார்த்துள்ளனராம்.

sriperumbudhur crime

அப்போது அவர்கள் வீட்டுக்கு போகலாம் என அழைத்த போது, அந்த குழந்தை வரவில்லையாம். அந்த குழந்தை எப்போதும் வெளியே எங்காவது போய்க் கொண்டே இருக்குமாம், அது போல் அந்த சிறுமி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்திருப்பாள் என நினைத்து அவர்களும் வந்துவிட்டனர்.

குழந்தை காணவில்லை

அதன் பிறகு அந்த குழந்தையை காணவில்லை. குழந்தையின் தாய் கல்பனா, அந்த குழந்தையை சரி வர பராமரிக்க மாட்டார். அந்த குழந்தைக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம். ஆனாலும் அந்த குழந்தைதான் சாமான் தேய்க்கும், தண்ணீர் எடுத்து வரும். அவ்வப்போது அந்த குழந்தையை அவரது தாய் அடிப்பார்.

ஜார்க்கண்ட்

குழந்தை காணாமல் போன போது அந்த தாய் கல்பனா ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுவிட்டார். குழந்தையின் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தைக்கு தாத்தா பாட்டி இருக்கிறார்கள், அதாவது கல்பனாவின் அம்மா, அப்பா! அதே பகுதியில்தான் வசிக்கிறார்கள்.

பக்கத்து வீட்டில் விட்டுச் சென்ற அலட்சியம்

ஆனால் ஊருக்குச் செல்லும் போது குழந்தையை, தனது தாய், தந்தை வீட்டில் விட்டு செல்லாமல், பக்கத்து வீட்டில் விட்டு சென்றுவிட்டாராம். அந்த குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ 50 தருவதாகவும், தான் வரும் வரை சாப்பாடு போடுமாறும் கூறிவிட்டுச் சென்றாராம்.

தாத்தா பாட்டி

தாத்தா பாட்டியும், குழந்தை பக்கத்து வீட்டில் இருப்பதாக கருதி இருந்தனர். தற்போது அந்த சிறுமியை காணவில்லை என்றதும் நாங்கள் எல்லாம் தேடி பார்த்தோம். போலீஸிலும் புகார் கொடுத்துள்ளோம். அந்த குழந்தை காணாமல் போனதற்கு முழு காரணம் தாயின் அலட்சியப்போக்குதான். சரியான பராமரிப்பின்மைதான்!

பள்ளிக்குக் கூட அனுப்பாமல் கொடுமை

அந்த சிறுமியை பள்ளிக்கு கூட அனுப்பாமல் வீட்டில் வேலை வாங்கி வந்தார். நாங்கள் எங்கள் பகுதிக்கு வரும் இந்திக்காரர்களை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை சேர்க்குமாறு அறிவுறுத்துவோம். அது போல் கல்பனாவிடமும் சொன்னோம், அவர் சேர்த்துவிடவில்லை. இப்போது அந்த குழந்தையை போலீஸார் எப்படியாவது நல்லபடியாக கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்" என அந்த பக்கத்து வீட்டு பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டிற்கு சென்றுள்ளார். இதனால் சிறுமியை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டுச் சென்றாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை (16ஆம் தேதி) சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே
நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சிறுமி வீடு திரும்பாததால், தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள், கிராமமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

தற்போது வரை சிறுமி கிடைக்காததால் திருப்பெரும்புதூர் காவல்நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 10 தினங்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே 8 வயது சிறுமி மாயமான சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+