பகீர் கபிலா.. படிச்சது எம்ஏ.. நெற்றி நிறைய குங்குமம்.. கழுத்துல பாம்பு.. சாமியாரானது இப்படித்தான்!

மிரட்டும் பெண் சாமியார் கபிலாவின் சாகசங்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பாம்புக்கு பாலாபிஷேகம்.. கழுத்தில் போட்டு அருள் வாக்கு.. பெண் சாமியாரை தட்டித்தூக்கிய வனத்துறை!

    காஞ்சிபுரம்: ரெட் கலர் புடவை.. நெற்றி நிறைய குங்குமம், மஞ்சள் பூசிய மேனி.. பாம்பை தூக்கி கழுத்தில் போட்டு கொண்டு.. தன்னை அம்மனாகவே பாவித்து.. ஊரை ஏமாற்றிய பெண் சாமியார் கபிலாவின் பின்னணி இது!

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்தவர் கபிலா.. 2000ம் வருஷம் முதல் அப்பகுதியில் அருள்வாக்கு சொல்லி வருகிறார். இதனால் மக்கள் கூட்டம் இவரிடம் அலைமோதி கொண்டே இருக்கும்.

    கடந்த 2018ம் வருடம், இவரது கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி என்ற நாக பூஜையை இவர் செய்திருக்கிறார்.. இதனை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுள்ளார்.. வீடியோ தீயாக பரவ.. பாம்புடன் இந்த பெண்ணை பார்த்த மக்கள் இதை உற்று கவனித்தனர்.

    வீடியோ

    வீடியோ

    அது மட்டுமல்ல.. நாகப்பாம்புக்கு பாலாபிஷேகம் செய்வதுடன், அந்த பாம்பை தூக்கி கழுத்தில் போட்டு அருள்வாக்கு சொல்லும் வீடியோவும் வைரலானது.. விஷயம் காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறைக்கு சென்றது.. பெண் சாமியார் கபிலாவை அதிகாரிகள் சுற்றி வளைத்து வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.. கபிலாவிடம் விசாரணை நடந்து வருகிறது.. இதுபோக இவரை பற்றின சில தகவல்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

    பாம்பு

    பாம்பு

    கபிலா எம்ஏ படித்துள்ளாராம்.. என்னவோ தெரியவில்லை, வேலை வெட்டிக்கு போகாமல் ஆன்மீகம் பக்கம் வந்துவிட்டார்.. பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு தன்னை அம்மனாகவே பாவித்து கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்.

    ஃபேமஸ்

    ஃபேமஸ்

    சின்ன ஓலைக் குடிசையில்தான் முதன்முதலில் அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.. பாம்பை கழுத்தில் சுற்றி கொண்டு அருள்வாக்கு சொல்லும் யூடியூப் வீடியோக்கள் மூலமாக இன்று உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகிவிட்டார் கபிலா.

    கோயில்கள்

    கோயில்கள்

    இதுவாவது பரவாயில்லை.. முன்பெல்லாம் 20 கோழிகளை தன் கோயிலுக்கு கொண்டு வந்து ஒரேடியாக அவைகளின் கழுத்தை கடித்து துப்பி, தெறிக்க விடுவாராம்.. ஆனால் கோயில்களில் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்பவும்தான் ஓரளவு இவர் அடங்கினார்.. இதற்கு பிறகு வெறும் பாம்புதான்!

    கலர் கலர் புடவை

    கலர் கலர் புடவை

    எப்ப பார்த்தாலும் தன்னை அம்மன் என்று சொல்லி கொண்டே இருப்பாராம்.. இதற்காக வண்ண வண்ண புடவைகளை அம்மனை போல உடுத்தி... கலர் கலர் சீரியல் லைட்டுகளை முகத்தில் அடிக்க வைத்து.. மிரள வைப்பாராம்.. இதை அவரே வீடியோவாகவும் எடுக்க வைத்து அதையும் மக்களிடம் கொண்டு சென்று சுயதம்பட்டம் அடித்து கொள்வதில் படு கில்லாடி என்கிறார்கள்.

    கைது

    கைது

    இதுவாவது பரவாயில்லை.. முன்பெல்லாம் 20 கோழிகளை தன் கோயிலுக்கு கொண்டு வந்து ஒரேடியாக அவைகளின் கழுத்தை கடித்து துப்பி, தெறிக்க விடுவாராம்.. ஆனால் கோயில்களில் விலங்குகளை துன்புறுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவரப்படவும்தான் ஓரளவு இவர் அடங்கினார்.. இதற்கு பிறகு வெறும் பாம்புதான்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+