Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணன் முறை "உறவு".. அபார்ஷனுக்கு வந்த 17 வயது சிறுமி.. இளைஞரை போக்சோவில் தூக்கிய குளச்சல் போலீஸ்

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: அண்ணன் - தங்கை உறவு முறை என்று தெரிந்துதான் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.. கடைசியில் 17 வயது சிறுமி கர்ப்பமான கொடுமையும் நடந்துள்ளது.. இதையடுத்து அந்த அண்ணனை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்!!

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி அடுத்த மணக்கரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த சிறுமி.. 17 வயதான அவர், 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 17 year old girl is pregnant by her cousin brother near kanniyakumari

இந்நிலையில், நேற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்தனர்.. சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி என்பதால் துடித்து கொண்டிருந்தார்.

அவரை செக் செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாசம் கர்ப்பம் என்று சொன்னார்கள்.. மேலும் உடனடியாக குளச்சல் மகளிர் போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்.. அவர்கள் விரைந்து ஆஸ்பத்திரிக்கு வந்தனர். சிறுமியையும், அவரது அம்மாவையும் விசாரித்தனர்.

அப்போதுதான் விவகாரம் வெளியே வந்தது.. சிறுமியின் பக்கத்து வீட்டிலேயே அண்ணன் உறவு முறையான 19 வயதானவருடன் பழகி வந்துள்ளார்.. அவர் பெயர் சஞ்சீவி.. நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆர்ட்ஸ் காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார்.. கடந்த ஜனவரி மாதத்தில் ஒருநாள், உன்னை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்.. யார் எதிர்த்தாலும் சரி, உன்னையே கல்யாணம் செய்வேன்" என்று சொல்லியே சிறுமியை வலையில் வீழ்த்தி உள்ளார்.

அந்த பேச்சில் மயங்கிய சிறுமியும் இளைஞரை விரும்ப ஆரம்பித்தார்.. இருவரும் வெளியே ஊர் சுற்றினர்.. பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.. இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.. இருவரையுமே கூப்பிட்டு கண்டித்தனர்.. உறவுமுறையை எடுத்து சொல்லி அறிவுறுத்தினர்.

ஆனாலும் இருவரும் திருட்டு தனமாக பழகி வந்துள்ளனர்.. பலமுறை வீட்டில் ஆள் இல்லாத சமயங்களில் சஞ்ஜீவ்வை வீட்டுக்கு அழைத்துள்ளார் சிறுமி... இறுதியில்தான் மகள் கர்ப்பம் என்று பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.. அதனால் அபார்ஷன் செய்வதற்காக பரசேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அவர்களோ அபார்ஷன் செய்ய முடியாது அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்லி உள்ளனர்.. இதன்பிறகுதான் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தது தெரியவந்தது.

கர்ப்பத்துக்கு காரணமான சஞ்ஜீவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ததுடன், தற்போது ஜெயிலிலும் அடைத்துள்ளனர். சிறுமியின் தாயாரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.. அதேபோல சிறுமிக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+