கல்யாண பத்திரிக்கை.. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார்.. கன்னியாகுமரி சம்பவத்தை பாருங்க
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 8¾ பவுன் நகைகள் கொள்ளை அடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது கொள்ளை கும்பல்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சூழால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா . இவருடைய கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். மகன் மற்றும் மனைவி திருமணமாகி தனியாக வசித்து வருவதால், வீட்டில் கீதா மட்டும் தனியாக வசித்து வந்தார்

இந்தநிலையில் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் கீதா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த 2 மர்ம நபர்கள் அவரை தேடி வந்தனர். அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாக கூறியுள்ளார்கள். உடனே, கீதா அவர்களை, வீட்டின் உள்ளே அழைத்து அமர வைத்து உபசரிக்க தொடங்கினார். அதன் பின்னர் வீட்டிற்குள் வந்த பின்னர் 'நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?' என்று கீதா கேட்டார். அதற்கு இரண்டு நபர்களும் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்-
இதனிடையே திடீரென 2 பேரும் கீதாவை தாக்கி அவரது கை, கால்களை கட்டி வாயில் துணியை நுழைத்து கீழே தள்ளி உள்ளார்கள். தொடர்ந்து அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8¾ பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்கள். கீதாவின் வாயில் துணி நுழைக்கப்பட்டிருந்தால் அவரால் உடனே சத்தம் போட முடியாத நிலை ஏற்பட்டது.
சிறிது நேரம் கழித்து வாயில் இருந்த துணியை ஒரு வழியாக எடுத்துவிட்டு கீதா சத்தம் போட்டு கத்தினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள் அவர்கள் அவரது கை, கால்களில் இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார்கள். தொடர்ந்து நடந்த சம்பவங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள்..
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீசில் கீதாவின் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கீதா மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 8¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications