ஆசை பட பாணி! மகனை பிளாஸ்டிக் பையால் அமுக்கி கொன்ற பெற்றோர்! காலையில் பார்த்தால் அதிரவிட்ட 4 கால்கள்
கன்னியாகுமரி: ஆசை பட பாணியில் கன்னியகுமரியில் தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன். இவர் தக்கலை பகுதியை சேர்ந்த சைலஜா என்ற பெண்ணை 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஜீவா என்ற மகன் உள்ளார். 10 வயதாகும் இந்த மகன் பள்ளி ஒன்றில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. முரளிதரன் ஐடி ஊழியர் ஆவார்.
கொரோனாவிற்கு பின் இவர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியாக நிறைய கடன் வாங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளனர். இதையடுத்து உறவினர்கள் பலரிடம் மேலும் மேலும் கடன் வாங்கி உள்ளனர்.
வாங்கிய கடன் கழுத்தை நெரித்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதையடுத்து வேறு வழியின்றி பெரிதாக லோன் எடுத்து கடனை அடைக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் இவரின் வருமானத்திற்கு லோனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மகன் ஜீவா திடீரென பைத்தியம் ஆகி உள்ளார். ஜீவாவிற்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு பைத்தியம் ஆகி உள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை வழங்கி உள்ளனர். ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எதுவும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து கோவில் கோவிலாக சென்றுள்ளனர். பல்வேறு பரிகாரங்களை செய்துள்ளனர்.
மருத்துவமனை சிகிச்சைக்கு மட்டும் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை., இதனால் மகன் ஜீவாவின் பள்ளி படிப்பும் தடை பட்டது. ஒரு பக்கம் கடன், மறுபக்கம் மகனின் உடல்நிலை என்று முரளிதரன்- சைலஜா இருவரும் மனக்கஷ்டத்தில் மூழ்கி உள்ளனர்.
தற்கொலை: இந்த நிலையில்தான் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதையடுத்து மகன் ஜீவா தூங்கும் போது ஆசை பட பாணியில் முகத்தில் பிளாஸ்டிக் பையை மூடி அவரை மூச்சு இறைக்க வைத்துள்ளனர். சில நிமிடங்கள் அப்படியே வைத்து அமுக்கிவிட்டு கொன்று உள்ளனர்.
அடுத்து சில மணி நேரங்கள் கழித்து மகன் இறந்துவிட்டானா என்ற சந்தேகம் வந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் கடைக்கு சென்று மெடிக்கலில் ஸ்டெதாஸ் கோப் ஒன்றை வாங்கி ஜீவா உயிரோடு இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
அதன்பின் இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். கணவர் ஒருவர் அறையிலும், மனைவி இன்னொரு அறையிலும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலையில் தினமும் பால் கொண்டு வரும் முரளிதரன் தந்தைதான் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை என்று ஜன்னலை உடைத்துள்ளார்.
ஜன்னல் வழியாக பார்த்தவருக்கு 4 கால்கள் இரண்டு அறையிலும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காட்சிதான் தெரிந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று பேரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications