இன்பமாக இருக்கலாம்.. இளைஞர்களுக்கு ஸ்டேப்ளர் பின் அடித்து ரசித்த கேரள பெண்.. இறுதியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜெயேஷ், ரஷ்மி தம்பதிக்கு விசித்திரமான பழக்கம் இருந்துள்ளது. அந்த பழக்கத்தை பார்த்து ஆசைப்பட்டு போன வாலிபர்கள் தொடங்கி, மொத்த கேரளாவையும் மிரள வைத்துள்ளது. என்ன பழக்கம் என்றால், வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைக்கும் ரஷ்மி, அவருடன் நெருக்கமாக இருப்பாராம். அந்த நேரம் வரும் அவருடைய கணவர் ஜெயேஷ், அவர்களை மிரட்டி பணம் பறிப்பாராம். இறுதியில் வாய் கூசும் அளவிற்கு சம்பவங்கள் நடக்குமாம்.
சிலர் பணம் பறிக்க பல்வேறு தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மனைவியை வைத்தே தவறான வீடியோ போடுவது அல்லது மனைவியை பிறருடன் பழக விட்டு, அவர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் இப்போது சிலர் ஈடுபடுகிறார்கள். இதுபோன்றவர்களை போலீசிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க முடியும். கேரளாவில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

இன்ஸ்டாவில் பழக்கம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல்குன்னு பகுதியில் 29 வயதாகும் ஜெயேஷ் வசிக்கிறார். இவருடைய மனைவி ரஷ்மிக்கு 23 வயது ஆகிறது. ரஷ்மி, கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ஒரு இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பை ஏற்படுத்தி உள்ளார். ஒரு நாள் ரஷ்மி அந்த வாலிபரை, நாம் உல்லாசமாக இருக்கலாம் என கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அதை நம்பிய அந்த இளைஞர், கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ரஷ்மியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்குள் சென்ற அந்த வாலிபர், ரஷ்மியிடம் நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ரஷ்மியின் கணவர் ஜெயேஷ், அதை தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறார்.
26 முறை ஸ்டேப்ளர் பின் அடித்தார்
பின்னர் திடீரென மறைந்திருந்த இடத்தில் இருந்து வேகமாக வந்த ஜெயேஷ், மனைவியுடன் சேர்ந்து அந்த வாலிபரை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.6 ஆயிரத்தை பறித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரின் 2 கைகளையும் கட்டி தொங்க விட்டதுடன், மர்ம உறுப்பில் 26 முறை 'ஸ்டேப்ளர் பின்'களை அடித்து சித்ரவதை செய்தாராம்.
துணியால் வாயை கட்டி
மேலும், அவரது கை விரல் நகங்களை பிடுங்கினாராம். இதில் வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே அவரது வாயை துணியால் கட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு போட்டு விட்டு சென்றார்களாம். அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், அந்த வாலிபரின் முனகல் சத்தம் கேட்டு அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.
இதுபற்றி மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் கேரளாவின் ஆரன்மூளா போலீசார், இளைஞர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்கள். பின்னர் இந்த வாய்கூசும் செயல்களில் ஈடுபட்ட ஜெயேஷ், அவரது மனைவி ரஷ்மியை கைது செய்தனர்.
பணம் செல்போன் பறிப்பு
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது பணத்துக்காக ரஷ்மி வாலிபர்களை குறிவைத்து முதலில் ஆசை வார்த்தை கூறி இன்ஸ்டாவில் அழைத்து வலையில் வீழ்த்துவாராம். பின்னர் வீட்டிற்கு அழைத்து பணம், செல்போன் உள்பட உடமைகளை பறிப்பாராம். இந்த சம்பவத்தில் மனைவிக்கு உடந்தையாக ஜெயேஷ் இருப்பாராம். இருவரும் ஜோடியாக இந்த வேலை செய்து வந்தார்களாம்.
கடந்த 5-ந்தேதி ஓணம்விழா அன்று ரான்னியை சேர்ந்த தன்னுடன் வேலை பார்த்து வந்த ஒரு இளைஞரை ரஷ்மி வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பறித்தும் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்தாராம். அதுவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட இளைஞர் கூறுகையில், நான் வைத்து இருந்த பணத்தையும், செல்போனையும் பறித்து விட்டு கணவர் உதவியுடன் மிரட்டி கட்டி தொங்கவிட்டனர். பின்னர் எனது மர்ம உறுப்பு உள்பட பல பகுதிகளில் 'ஸ்டேப்ளர் பின்' அடித்து சித்ரவதை செய்தார். மேலும், மர்ம உறுப்பில் மிளகாய் பொடியை தூவி ரஷ்மி ரசித்தார். கணவன்-மனைவி இருவரும் வெறி பிடித்ததுபோல் என்னிடம் நடந்து கொண்டார்கள். இதுகுறித்து ஆரன்முளா போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications