நாகர்கோவிலில் தங்க நகையை மீட்க போன பெண்.. கன்னியாகுமரி கள்ளக்காதலனுடன் ஓட்டம்.. இறுதியில் ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவிக்கு 36 வயது ஆகிறது. மீனவர் கடலுக்கு மீன் பிடிக்க அடிக்கடி சென்று வருவார். இந்நிலையில் மீனவரின் மனைவிக்கு ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடகு வைத்த நகையை மீட்க சென்ற போது கள்ளக்காதலனுடன் ஓடிப்போய்விட்டாராம். இதனிடையே 3 குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறியதால் அந்த பெண் மனம் திருந்தி கணவருடன் வசித்து வருகிறார்.
கள்ளக்காதல் என்பது இந்த சமூகத்தின் கலாச்சார சீர்கேடுகளுக்கு முதல் காரணமாக இருக்கிறது. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்து விலகிவிடலாம். ஆனால் திருமணம் ஆன பின்னர் வேறு ஒருவருடன் ஈர்ப்பு ஏற்பட்டு அவருடன் உல்லாசமாக இருக்கிறார்கள்.

ஆண், பெண் இருவருமே தங்கள் வாழ்க்கை துணையை ஏமாற்றி, நல்லவர் போல் நடித்து கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரும் போது, வீட்டை விட்டு ஓடிப்போவது அல்லது கணவனை காலி செய்வது அல்லது தவறான முடிவெடுப்பது நடக்கிறது.
36 வயது பெண்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பிரச்சனை பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மனைவிக்கு 36 வயது ஆகிறது. இவர் வழக்கமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவார்.
அடகு வைத்த தங்க நகை
இந்தநிலையில் மீனவரின் மனைவி ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க செல்வதாக மாமியாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
கள்ளக்காதலனுடன் ஓட்டம்
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞருடன், மீனவரின் மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் கள்ளக்காதலனுடன் அவருடைய ஊருக்கு ஓடியது தெரியவந்தது.. இதனை தொடர்ந்து போலீசார் மீனவரின் மனைவியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் அவர் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்தார்.
குழந்தைகளால் மனம் மாறினார்
ஆனால் அவளுடைய 3 குழந்தைகளும், எங்களுடன் வந்து விடும்மா? என கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனால் மனம் திருந்திய மீனவர் மனைவி, கணவருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications