கன்னியாகுமரி அருகே நண்பர்களுடன் ஜாலியாக குளித்த மாணவன்.. கரையிலேயே ஒரே நொடியில் சம்பவம்
கன்னியாகுமரி: களியக்காவிளையை சேர்ந்தவர் ஷேக்முகம்மது, ஓட்டல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு தஸ்லீமா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இவர்களில் இளைய மகன் பயாஸ் அகமதுக்கு 16 வயது ஆகிறது. இவர் நண்பர்களுடன் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது நடந்த ஒரு நொடி சம்பவம், நண்பர்களுக்கு மட்டுமின்றி, உறவுகளையும் கலங்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த ஷேக்முகம்மது என்பவர் ஓட்டல் தொழிலாளி பணியாற்றினார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக தக்கலை அருகே உள்ள சரல்விளையில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு தஸ்லீமா என்ற மனைவியும் 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்களில் இளைய மகன் பயாஸ் அகமதுக்கு 16 வயது ஆகிறது. இவர் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார்.

தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) கடைசி தேர்வு எழுதுவதற்கு தயாராக இருந்தார். இந்த நிலையில் நேற்று நண்பர்கள் அவரை குளிப்பதற்காக ஆற்றுக்கு கூப்பிட்டுள்ளார்கள். அவரும் முட்டைகாடு அருகே சரல்விளையில் உள்ள வள்ளியாற்றின் கரைக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு ஆற்றை கண்டதும் அனைவரும் குளிக்க ஆசைப்பட்டனர்.
அதன்படி பயாஸ் அகமது மற்றும் 2 நண்பர்கள் சேர்ந்து ஆற்றில் இறங்கி குளித்துள்ளார்கள். சிறிது நேரம் குளித்த பின்பு பயாஸ் அகமது ஆற்றில் இருந்து கரையேறி தனக்கு மயக்கம் வருவதாக கூறிருக்கிறார் அத்துடன் ஆற்றின் கரையில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பயாஸ் அகமதுவை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மாணவனை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. எப்படி இறந்தார் என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும். இதுதொடர்பாக கொற்றிகோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பிளஸ்-1 மாணவன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications