கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்று சின்னமான வட்டக்கோட்டைக்குள் செல்ல திடீர் நுழைவுக்கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    வட்டக்கோட்டைக்குள் செல்ல திடீர் நுழைவுக்கட்டணம்-வீடியோ

    கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு மிக அருகே அமைந்துள்ளது வரலாற்று சின்னமான வட்டக்கோட்டை. இங்கு செல்வதற்கு திடீரென நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த உள்ளூர்வாசிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    வட்டக்கோட்டைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அரசர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோட்டை இந்த பகுதியை காக்க பீரங்கி தலமாகவும் அரசர் ஓய்வு எடுக்கும் இடமாகவும் இருந்து வந்தது. இந்த கோட்டையின் மூன்று பகுதி கடலிலும் ஒரு பகுதி கரையிலும் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

    A sudden entrance fee to enter the Vattakottai .. People have a strong argument with the staffs

    இக்கோட்டை தற்போது மத்திய அரசின் தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் திருவனந்தபுரத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வட்டக்கோட்டையை பாா்வையிடாமல் செல்வதில்லை.

    இதற்கு இதுவரை நுழைவு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டதில்லை இதனால் உள்ளூர்வாசிகளும் ஓய்வு நேரங்களில் இங்கு வந்து பொழுதை கழித்து வந்தனர்

    A sudden entrance fee to enter the Vattakottai .. People have a strong argument with the staffs

    இந்நிலையில் வட்டக்கோட்டைக்குள் செல்ல இன்று முதல் இந்தியர்களுக்கு நுழைவு கட்டணமாக 25 ரூபாயும் வெளிநாட்டவர்களுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் வட்டக்கோட்டைக்கு முன்பு கூடி, அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சவார்த்தை நடத்தினர்

    எடப்பாடி தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்து விடுவார்... டிடிவி தினகரன் சொல்கிறார்எடப்பாடி தேர்தலுக்கு பிறகு ராஜினாமா செய்து விடுவார்... டிடிவி தினகரன் சொல்கிறார்

    அப்போது பேசிய ஊழியர்கள் இவ்விகாரத்தில் தங்கள் கைகளில் ஒன்றும் இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனையடுத்து போலீசார் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறியதையடுத்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தின் போது சுற்றுலா பயணிகளை உள்ளூர்வாசிகள் உள்ளே செல்ல விடாமல் திருப்பி அனுப்பியதால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

    English summary
    The historic Vattakottai is very close to Kanyakumari, an international tourist attraction. Striking locals who were shocked by the entrance fees suddenly went to argue with staff.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X