பள்ளிக்கு பொட்டு வைத்து போக முடியலைனா.. அந்த பெண் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றுவார்? அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: ஒரு பள்ளிக்கூடத்திற்கு பெண் பொட்டு வைத்து கொண்டு போக முடியவில்லை என்றால், அந்த பெண்ணால் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்ற முடியும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார். திருநீறும், ருத்ராட்சமும் குழந்தைகள் அணிவதில் எந்த தவறும் இல்லை என்று கூறிய அவர், குழந்தைகளுக்கு அனைத்து மதங்களும் முக்கியம் என்பதை சொல்லி கொடுப்பதே மதச்சார்பின்மை என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான வைகுண்டபுரம் ஸ்ரீராமர் திருக்கோவில் முழுமையாக புனரமைப்பு செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முருகன் மாநாட்டைச் சேர்ந்த குமரியிலும் பாஜக சார்பாக ஆன்மீக நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது.

Annamalai Questions Opposition to Religious Symbols in Schools Defends Sanatana Dharma

அண்ணாமலை பேச்சு

இதனிடையே நேற்று முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் கடவுள் பெயரை வைத்து ஒரு கட்சி அரசியல் செய்கிறது என்று விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தான் மதம், கடவுள் பெயரை வைத்து அரசியல் செய்கிறது. பிள்ளையார் சிலையை உடைத்தது யார்?, ராமர் என்ன பொறியியல் பட்டம் பெற்றுள்ளாரா என்று கேட்டது யார்?

வாக்களிப்பது யாருக்கு?

கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய போது வேடிக்கை பார்த்தது யார்? தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்களிக்கும் போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்காக வாக்களிக்க போவதில்லை. உங்களின் குழந்தைகளுக்காக வாக்களிக்கப் போகிறீர்கள். ஏனென்றால் 5 ஆண்டுகளில் எந்த மாற்றமும் நடக்காது. சனாதன தர்மத்தை காக்க வேண்டுமென்று நினைத்தால், சிந்திக்க வேண்டும்.

சீருடை அணிவது ஏன்?

பள்ளிக்கு மாணவர்கள் செல்லும் போது திருநீறு வைத்து கொள்ள வேண்டும். ருத்ராட்சம் போட்டு கொள்ள வேண்டும். இந்த கருத்தை சொன்ன போது, அமைச்சர் அன்பில் மகேஷ் சிறுபிள்ளைத்தனமானது என்று கூறி இருக்கிறார். தமிழ்நாட்டில் சீருடை கொண்டு வரப்பட்டதற்கு காரணம் தெரியுமா? கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையில் ஏற்றுத்தாழ்வுகள் இருக்க கூடாது என்பதற்காக தான்.

சனாதன தர்மம்

ஆனால் சீருடை கொண்டு வரப்பட்டது மத அடையாளங்களை மறைப்பதற்காக கொண்டு வரப்படவில்லை. பள்ளிக்கே ஒரு பெண் பொட்டு வைத்து கொண்டு போக முடியவில்லை என்றால், என்ன சனாதன தர்மத்தை நாம் காப்பாற்றுகிறோம்.. என்ன இந்து மத தர்மத்தை பின்பற்றுகிறோம். அந்த பெண்ணால் எப்படி சனாதன தர்மத்தை காப்பாற்றும்?

திருமாவளவன் மீது அட்டாக்

பள்ளிக் கூடத்திற்கு செல்லும் போது பொட்டை அழித்தும், பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் வரும் போது பொட்டு வைத்து கொண்டும் இருந்தால், நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்?அனைவரும் சமம். அனைத்து சாதிகளும் சமம் என்று நினைப்பவர்கள் நாம். ஆனால் மத அடையாளங்களை பின்பற்றுவதில் தவறு இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

மதச்சார்பின்மை

திருநீறு வைக்க கூடாது, ருத்ராட்சம் போட கூடாது என்பது அல்ல மதச்சார்பின்மை. அது ஒரு மதத்தை காலில் போட்டு மிதப்பதாகும். குழந்தைகளுக்கு இன்னொரு மதமும் முக்கியம் என்று தெரிய வேண்டும். இஸ்லாம், கிறிஸ்தவமும் முக்கியம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+