பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தமிழகத்தில் 22இல் ஆர்ப்பாட்டம்.. பாஜக அண்ணாமலை பரபரப்பு அறிவிப்பு!
கன்னியாகுமரி: தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக குறைவான தொகை அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இதனை கூறினார்.
கடந்த முறை மழை வெள்ளத்தின்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது. ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் என்றால் ஒரு ஹெக்டேருக்கு 74 ஆயிரத்து 100 ரூபாய் என்ற நிலையில் தற்போது ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் என்பது மிக குறைவு.

நண்பர்கள்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த திமுக தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்துள்ளது. விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது. எனவே இந்த நிவாரண உதவியை கூடுதலாக வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற பாஜக கோரிக்கை விடுத்த போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசிடம் இருந்து பணம் வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார்.

மத்திய அரசு
ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சு அல்ல. மத்திய அரசு 2020-21 ஆம் ஆண்டு காலத்திற்கான மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய பேரிடர் நிதி ரூ. 300 கோடி ரூபாய் முழுமையாக வழங்கியுள்ளது. தமிழக அரசு தூர்வாரும் பணியில் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் 600 கிலோ மீட்டர் மட்டுமே தூர்வாரும் பணி நடத்தியுள்ளது ஏன்.

மழை வெள்ளம்
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி 11 மாவட்டங்களில் பாஜக முழுநேர போராட்டம் நடத்த உள்ளது.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட செல்லும் முதலமைச்சர் முழுமையாக ஆய்வு நடத்தவில்லை.

ஆய்வு
முதலமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி அங்கு ஏற்பட்டுள்ள பயிர்களின் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்தால் அவர் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்பாக அமையும். தமிழகத்தில் திமுக பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய் குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது மூன்று ரூபாய் மட்டுமே குறைத்துள்ளது.

மாநிலங்கள்
ஆனால் பாஜக அனைத்து மாநிலங்களிலும் இவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் கூட பெட்ரோல் விலை 9 ரூபாய், எட்டு ரூபாய், பத்து ரூபாய் என குறைத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏன் பெட்ரோல் விலை குறைப்பதற்கு திமுக தயக்கம் காட்டி வருகிறது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 22-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications