ஆபரேட்டர் அண்ணே அதை கொஞ்சம் போட்டுவிடுங்க.. “மெகா ஸ்கிரீனில் திமுக மாஜி பேட்டி”: அண்ணாமலை வேற லெவல்!
கன்னியாகுமரி: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது பாதயாத்திரையின்போது திமுகவை சரமாரியாக விளாசி வருகிறார். அந்த வகையில், நீட் தேர்வுக்கு எதிராக உண்ணாவிரதம் அறிவித்துள்ள திமுகவை விமர்சிக்கும் வகையில் ஸ்கிரீனில் திமுக முன்னாள் அமைச்சரின் பேட்டியை ஒளிபரப்பிக் காட்டி அண்ணாமலை பேசி வருகிறார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டு, அவர்களுடன் உரையாடி வருகிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய அண்ணாமலையின் நடைபயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைக் கடந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலை பாதயாத்திரையில் கையில் கட்சிக்கொடியை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான பாஜகவினர் நடந்து வந்தனர். அப்போது குழந்தைகள், பெண்கள், கட்சித் தொண்டர்கள் என ஏராளமானோர் அண்ணாமலையுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
ஆபரேட்டர் அண்ணே: பின்னர், வேனில் ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் தேர்வு இருக்கும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது. திமுகவினர் எதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் ஆற்காடு வீராசாமி பேசிய காட்சி எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, "ஆபரேட்டர் அண்ணே.. அந்த வீடியோவை கொஞ்சம் போட்டு விடுங்க" எனக் கூற, பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில், திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் பேசும் வீடியோ ஒளிபரப்பாகிறது.
அதில், திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய விஷயங்கள் ஒளிபரப்பாகின. மருத்துவ கவுன்சிலிங் பட்டியலை கவுன்சிலிங் நடப்பதற்கு முன்னரே, தனியார் மருத்துவ கல்லூரி வைத்துள்ள எம்.ஏ.எம் இடம் கொடுத்து விட்டு, கட்சிக்கு நிதி கேட்போம் எனவும், அவரும் ரூ.5 கோடி வரை பணம் கொடுப்பார் என்றும் ஆற்காடு வீராசாமி பேசும் காட்சி இடம்பெறுகிறது.
ஆற்காடு வீராசாமி பேட்டி: ஆற்காடு வீராசாமி அந்த வீடியோவில் பேசுகையில், "தேர்தல் வந்துவிட்டால் குறைந்தபட்சம் வேட்பாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் நேரத்தில் நிதி தேவை. அப்படி நிதி தேவைப்படும் நேரத்தில், பொருளாளராக இருக்கும் என்னை, நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என கருணாநிதி கூறுவார். நான், அதற்கான ஏற்பாடு செய்வேன். எப்படி செய்வேன் என்றால், எம்.ஏ.எம் வீட்டிற்கு போவேன். எம்.ஏ.எம் என் மீது அன்பு உள்ளவர்.
நான் அமைச்சராக இருந்த நேரத்தில் பல முறை எனது வீட்டிற்கு வந்துள்ளார். அவர் மருத்துவ கல்லூரி நடத்தி வருகிறார். நான் சுகாதார அமைச்சராக இருந்த போது, நாங்கள் முதலில் பட்டியல் ஒன்றை வெளியிடுவோம். நாங்கள் வெளியிட்ட பட்டியல் நகல் வேண்டும் என்பார். ஏன்? என்று கேட்பேன். நாங்கள் தேர்வு செய்யும்போது, பட்டியலில் இருக்கிறவர்களை எல்லாம் தேர்ந்தெடுத்துவிட்டால், அவர்கள் எப்படியும் அரசு கல்லூரிக்கு போய்விடுவார்கள்.

அந்த இடங்களை எல்லாம் பிறகு நாங்கள் நிரப்பிக்கொள்வோம். அதனால், அந்த பட்டியலின் நகல் வேண்டும் என்று கேட்பார். நான் கொடுத்து அனுப்புவேன். அவருடன் நிறைய தொடர்பு இருக்கும் காரணத்தால், அவரிடம் முதலில் சென்று கேட்பேன். ஏனெனில் அவருக்கு ஒரு கோடி, இரண்டு கோடி எல்லாம் ரொம்ப சாதாரணம். நான் வற்புறுத்தி கேட்டால் வேறு வழியில்லாமல் குறைந்தது 5 கோடி கொடுப்பார்." எனப் பேசுகிறார்.
தில்லு வேணும்: இந்த வீடியோவை ஒளிபரப்பிக் காட்டி, "தப்பு பண்ணிட்டு தைரியமா டிவியில் பேசுவதற்கு ஒரு தனி தில்லு வேண்டும். மருத்துவ கல்லூரி சீட்டை விற்றுவிட்டு பணம் வாங்கும் முறை பற்றிச் சொல்கிறார். தமிழ்நாட்டில் நீட் வருவதற்கு முன்பு இந்த முறையை தான் திமுக செய்து வந்தது" என காட்டமாக விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலையின் இந்த பிரச்சார யுக்தி கவனத்தை ஈர்த்துள்ளது. "ஹை லெவல் பிரச்சாரம்.. இதுக்கு முன் தமிழக மக்கள் இதை எல்லாம் பார்த்து இருக்கவே மாட்டார்கள். வரும் ஞாயிறு அன்று திமுகவினர் நடத்த போகும் உண்ணாவிரதத்தையும் நீட் நாடகத்தையும் சுக்கு நூறாக உடைத்துள்ளார் அண்ணாமலை. மருத்துவ கல்லூரி இடங்கள் எப்படி விற்கப்பட்டது என முன்னாள் திமுக சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த வாக்குமூலத்தை மக்களிடம் வீடியோவாக வெளியிடுகிறார் அண்ணாமலை" என பாஜகவினர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
-
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications