கன்னியாகுமரியில் காதலியுடன் ஓடிபோன பெங்களூர் ஐடி ஊழியர்.. கல்யாண மேடையில் மணமகளுக்கு ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பைங்குளம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருவட்டாரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மணமகன் அதற்கு முதல் நாள் திடீரென மாயமானதால் திருமணம் நின்றுப்போனது. கடைசி நேரத்தில் காதலியை கரம்பிடிக்க மணப்பெண்ணை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காதலிப்பவர்கள் தயவு செய்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் போதே உண்மையை சொல்லிவிடுங்கள். கடைசி நேரத்தில் ஏமாற்றிவிட்டு, மணமேடைக்கு வராமல் ஓட்டம்பிடிப்பது அதிகரித்துள்ளது. சினிமாவை பார்த்து உண்மை என்று, ஹீரோயிஷம் செய்வதாக நினைத்து தன்னையும் ஏமாற்றி, தன்னை நம்பி வர இருந்த பெண்ணையும் ஏமாற்றி, பெற்றோர் உறவினர்களையும் ஏமாற்றி செல்வது என்பது பெரிய தவறு. அதேபோல் தான் சில பெண்கள் திருமணத்திற்கு முதல் நாள் காதலனுடன் ஓடிப்போகும் சம்பவங்கள் நடக்கிறது. திருமணம் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்வது நல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பைங்குளம் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் பொறியியலாளர் ஒருவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சாப்ட்வேர் என்ஜினியரான அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கடந்த 6 மாதத்துக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஆற்றூரைச் சேர்ந்த பெண்ணுக்கும், ஐடி என்ஜினியருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. மணப்பெண் முதுகலை படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.
இருவீட்டார் சம்மதத்துடன் திருமண தேதியும் குறிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 27-ந் தேதியான நேற்று திருமணத்தை நடத்தலாம் என பெரியவர்கள் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டது. திருமண ஏற்பாடுகள் தடல்புடலாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்றுமுன்தினம் உண்ணாமலை கடை பயணம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணப்பெண் வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்க மாப்பிள்ளை வீட்டார் மதியம் மண்டபத்துக்கு வருவார்கள் என எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் ரிசப்சனுக்காக காத்திருந்த மணப்பெண் வீட்டாருக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மணமகன் வீட்டில் இருந்து செய்தி வந்தது. அதாவது பெண்ணின் தந்தைக்கு, மணமகனின் மாமா என்று ஒருவர் போனில் பேசி உள்ளார். மணமகன் பெங்களூருவில் ஒரு வழக்கில் கைதாகி உள்ளதாகவும், உங்கள் மகளுக்கு வேறு மாப்பிள்ளையை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என கூறினார்களாம். இதனை கேட்டு, மகிழ்ச்சியோடு காத்திருந்த மணப்பெண்ணும் துடிதுடித்து போனார். மணப்பெண் வீட்டாரும் செய்வதறியாமல் திகைத்து நின்றார்கள்.
எனினும் முழு விவரத்தை அறிய மணப்பெண் வீட்டார் தரப்பினர், மணமகனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது. மணமகனை தொடர்பு கொண்டபோது அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து பெண் வீட்டார் திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மணமகனான என்ஜினியருக்கும், உடன் வேலை பார்த்த பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்ததும் தெரியவந்தது. கடைசி நேரத்தில் காதலியை கரம்பிடிக்க மணப்பெண்ணை அவர் ஏமாற்றியதும் அம்பலமானது. மேலும் காதலியை அவர் திருமணம் செய்ததாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போயிருக்கிறது. இந்த சம்பவம் கன்னியாகுமரி திருவட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"நாய்கள் குரைப்பதால் தூங்க முடியவில்லை".. புகாரளித்த பெண்.. போலீஸ் செய்த வேலையை பாருங்க -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications