சென்னையில் பயங்கரம்.. துண்டு துண்டா "சிசுவை" வெளியே எடுத்த நர்ஸ்.. 2 காலை வெட்டி.. அதில் ஒன்றை.. ஐயோ
கன்னியாகுமரி: தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்சுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த கொடுமை சம்பவம் குறித்து, மேலும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா என்ற பெண் சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்ஸாக வேலை பார்த்து வருபவர்.. இவர் செல்வமணி என்பவரை காதலித்து வந்தார்.. செல்வமணி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. சென்னையில்தான் இவரும் வேலை பார்ப்பதால், 2 பேருமே கல்யாணம் செய்யாமலேயே நெருக்கமாகிவிட்டார்கள்.

கர்ப்பம்: இதன் விளைவு வினிஷா கர்ப்பமானார்.. இந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாக இருந்ததால், நர்சு இதுபற்றி தன்னுடைய குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல் மறைத்தார்...
எனவே, 7 மாத கர்ப்பிணியாக தனியாகவே அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி வந்திருக்கிறது.. எனவே, பாத்ரூமுக்குள் சென்று தனக்குத்தானே சுயபிரசவம் பார்க்க முடிவு செய்தார்... ஆனால், அப்போதுதான் சுயபிரசவம் அவ்வளவு எளிதல்ல என்பது அவருக்கு தெரியவந்தது.
பிரசவ வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியவில்லை.. இதனால், கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்.. வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது..
பாத்ரூம்: இதற்கு பிறகு, குழந்தையின் கால்களை அதே பாத்ரூமில் வீசிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஓடினார்.. ஆனால், குழந்தை இறந்துவிட்டதை டாக்டர்கள் உறுதிசெய்தனர். உடனடியாக வினிஷாவையும் அங்கேயே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையையும் மேற்கொண்டனர். பின்னர், மாம்பலம் போலீசுக்கும் தகவல் தந்தது. இதையடுத்து, போலீசாரும் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்..
இதுகுறித்து போலீஸார் சொன்னதாவது: "நர்ஸ் தனக்கு தானே பாத்ரூமில் பிரசவம் பார்த்திருக்கிறார்.. வயிற்றிலிருந்து குழந்தை வெளிவந்த போது அவருக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது...
ரத்தப்போக்கு: உடனே குழந்தையின் கால்களை வெட்டியெடுத்திருக்கிறார். இதில், ஒரு காலை மட்டும் கழிவறை தொட்டியில் வீசியிருக்கிறார். பிறகுதான், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை வயிற்றிலிருந்து வெளியில் எடுத்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் நர்சுக்கு எழும்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது... குழந்தையின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.. இதற்கு பிறகே குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது உயிருடன் பிறந்த குழந்தையை நர்சு கொலை செய்தாரா? என்பது தெரிய வரும்.
இளைஞர்: ஆனால், குழந்தையை கொன்றதற்கான சாத்தியக்கூறுகள்தான் அதிகமாக இருப்பதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.. ஒருவேளை, குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டால் இப்போதைய வழக்கு பிரிவுகள் மாற்றப்பட்டு, கொலை வழக்கு பதிவு செய்யப்படும்.. நர்சிடம் நெருங்கி பழகிய மதுரை இளைஞர் குறித்தும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. அவரிடம் DNA பரிசோதனை மேற்கொள்ளப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications