"சர்ச்" என்ற பெயரில் விபச்சார விடுதி.. தனிமையில் ஜோடிகள்.. சிக்கிய பாதிரியார்.. மொத்தம் 7 பேர்..!
சர்ச் பெயரில் விபச்சார தொழிலில் பாதிரியார் ஒருவர் ஈடுபட்டு வந்துள்ளார்
கன்னியாகுமரி: ஒரு பாதிரியார் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. சொகுசு பங்களாவை சர்ச் ஆக்கி, அந்த சர்ச்சுக்குள் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.. அதற்குள் நிறைய பெட்ரூம்கள் இருந்தனவாம்.. ஒவ்வொரு ரூமிலும் ஜோடி ஜோடியாக சிக்கி இருக்கிறார்கள்... இப்படி ஒரு சம்பவம் குமரியில் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் எஸ்டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் லால் ஷைன் சிங்.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர்தான் அந்த மதபோதகர்..
இவருக்கு ஒரு சொகுசு பங்களா அதே பகுதியில் உள்ளது.. அந்த பங்களாவில் "பெடரல் சர்ச் ஆப் இந்தியா" என்ற பெயரில் சர்ச் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

பெண்கள்
இந்த பகுதியில் இந்த சர்ச் மிகவும் ஃபேமஸ் ஆனது.. அதனால், சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து செல்வார்கள்.. குறிப்பாக கேரள மாநிலத்தில் இருந்தும் இளம்பெண்கள் வருவார்கள்.. ஆனால் அந்த பெண்கள் அரைகுறை டிரஸ்ஸில், காஸ்ட்லியான காரில், இந்த சர்ச்சில் வந்து இறங்குவார்களாம். இதை அந்த பகுதி மக்களே பலமுறை கவனித்துள்ளனர்..

தகவல்
சர்ச் பெயரை தவறாக பயன்படுத்தி இந்த பாதிரியார் பாலியல் தொழில் நடத்தி வருவதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த தேவாலய பெயரில் இயங்கும் அந்த சொகுசு பங்களாவில் அதிரடியாக போலீஸ் புகுந்தது.. ஆய்வையும் மேற்கொண்டது..அப்போது மொத்தம் 10 பேர் உள்ளே இருந்திருக்கிறார்கள்..

சர்ச்
அந்த சர்ச்சில் நிறைய ரூம்கள் தனித்தனியாக இருந்ததாம்.. ஒவ்வொரு ரூமிலும் பெண்கள், ஆண்களுடன் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.. 2 இளம்பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் அள்ளி தூக்கி கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். எல்லாத்துக்கும் காரணம் அந்த ஃபாதர் லால் ஷைன் சிங் என்கிறார்கள்.. இவர்தான் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துள்ளார் என்பது விசாரணையில் உறுதியானது.. மேலும் சிலர் சிக்கி உள்ளனர்..

கும்பல்
இதைதவிர சுற்றுவட்டார பெண்களையும் இந்த சர்ச்சுக்குள் அழைத்து வருவதற்கென்ற 2 பெண்கள் இருக்கிறார்களாம்... இதில் இன்னொரு கொடுமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. இந்த கும்பலில் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார்.. அவரை அவரது அம்மாதான் பாலியல் தொழிலில் தள்ளினாராம்.. இப்போது 7 பேரிடமும் துருவி துருவி விசாரணை நடக்கிறது.. சர்ச் என்ற பெயரிலும், பாதிரியார் என்ற பெயரிலும் இப்படிப்பட்ட அக்கிரமம் நடந்ததை கண்டு, அந்த பகுதி மக்கள் அதிர்வில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications