Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாட்ச்மேனை கல்லை தூக்கி போட்டு கொன்ற சைக்கோ இளைஞர்.. நிர்வாண டான்ஸ் ஆடி விட்டு ஓட்டம்

வாட்ச்மேனை கொன்ற கொலையாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வாட்ச்மேனை கல்லை தூக்கி போட்டு கொன்ற சைக்கோ இளைஞர்

    கன்னியாகுமரி: கல்லை தூக்கி போட்டு ஒருவரை கொலையும் செய்துவிட்டு, நிர்வாணமாக நின்று கொண்டு டான்சும் ஆடிவிட்டு பிறகு அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடி உள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் பரகுன்று பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவருக்கு வயது 65. இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ சர்ச்-ன் வாட்ச்மேன் ஆவார்.

    கடந்த 28 தேதி இவர் வழக்கம்போல் நைட் டியூட்டி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, நடுராத்திரி ஒரு இளைஞர் சர்ச் பக்கம் வந்தார்.

    டான்ஸ் ஆடினார்

    டான்ஸ் ஆடினார்

    பார்ப்பதற்கே தெளிவாக இல்லை அவர். பிறகு திடீரென சர்ச் முன்பு நின்று கொண்டு டான்ஸ் ஆடினார். ஆடிக் கொண்டே இங்கும் அங்கும் ஓடி ஓடி சென்று வந்து கொண்டிருந்தார். பிறகு வந்து சர்ச் முன்னாடி நின்றுகொண்டார்.

    கல்லை போட்டார்

    கல்லை போட்டார்

    இதனை பார்த்த வாட்ச்மேன், அந்த இளைஞரிடம், "ஏன் இங்கே நிக்கறே?" என்று கேட்டுள்ளார். உடனே திடீரென்று வாட்ச்மேனை அடிக்க ஆரம்பித்தார் இளைஞர். வலி பொறுக்க முடியாமல் வாட்ச்மேன் அலறினார். பிறகு ஓடிப்போய் பெரிய பெரிய கல்லை தூக்கி வந்த இளைஞர், படாரென வாட்ச் மேன் மீது போட்டார்.

    புதருக்குள் வீசினார்

    புதருக்குள் வீசினார்

    இரண்டு கால்களிலும் கற்களை போடவும் ரத்தம் கொட்டி வலியால் துடித்தார் வாட்ச்மேன். ஆனால் அதை கண்டுகொள்ளாத இளைஞர், வாட்ச்மேன் காலில் போட்ட கற்களை தூக்கி கொண்டு போய் சர்ச் படிக்கட்டில் வைத்துவிட்டார் இளைஞர். பிறகு, வைத்த கற்களை திரும்பவும் எடுத்து வந்து அங்கிருந்த புதருக்குள் வீசினார்.

    நிர்வாண டான்ஸ்

    நிர்வாண டான்ஸ்

    அதன்பிறகு போட்டிருந்த டிரஸ்ஸை கழட்டிவிட்டு நிர்வாணமாக டான்ஸ் ஆடினார். அதன்பிறகு எங்கேயோ போய்விட்டார். ரத்த வெள்ளத்தில் வாட்ச்மேனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். அதன்பிறகு வாட்ச்மேன் கேரளாவில் உயர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். ஆனால் வாட்ச்மேன் நேற்று இறந்துவிட்டார்.

    கார் கண்ணாடி உடைப்பு

    கார் கண்ணாடி உடைப்பு

    கொலை செய்துவிட்ட நபர் யார் என்றே தெரியவில்லையாம். மார்த்தாண்டம் பகுதியின் சில இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாம். அந்த நபரை பொதுமக்கள் சிலரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ரோட்டில் யார் போனாலும் அவர்களை அடித்து விடுகிறாராம் அந்த இளைஞர்.

    சைக்கோவா?

    சைக்கோவா?

    அவரது நடவடிக்கை எல்லாம் பார்த்தால் சைக்கோ போல இருக்கிறதாம். யாருக்கு எப்போ என்னாகுமோ என்று தெரியாமல் மார்த்தாண்டம் பகுதி மக்கள் பீதியிலேயே உள்ளனர். அதனால் நிர்வாணமாக சுற்றி திரியும் சைக்கோ இளைஞரை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று போலீசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+