கன்னியாகுமரியில் பீப் கறியில் காத்திருந்த அதிர்ச்சி.. ஹோட்டலுக்கு சீல், 10 ஆயிரம் ஃபைன்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசையாக பீப் கறியை ஆர்டர் செய்தவருக்கு கரப்பான்பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதரமற்ற முறையில் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டலுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பரபரப்பான வாழ்க்கை முறையில் ஹோட்டல் சாப்பாடு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. அந்த காலத்தில் எல்லாம் ஹோட்டல் சாப்பாடு என்றாலே உலுக்கு ஒவ்வாது என்றும், தேவையற்ற செலவு என்றும் கருதி வந்த நிலையில் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. மாத சம்பளத்தில் மளிகை சாமான்களுக்கு பட்ஜெட் ஒதுக்குவது போல, ஹோட்டல் உணவுக்கென்ற பட்ஜெட்டுகளை ஒதுக்கும் குடும்பங்கள் பெருகிவிட்டன.

வாரம் 6 நாளும் ஓடி வியர்வை சிந்தி உழைத்துவிட்டு வார இறுதியில் குடும்பத்துடன் ஹோட்டலுக்குச் சென்று, சில் செய்து கொண்டே பொழுதைக் கழிக்கும் பழக்கம் இப்போது அதிகரித்துவிட்டது. சில உணவகங்களில் தரமற்ற முறையிலும், சுகாதாரமற்ற முறையிலும் உணவுகள் சமைக்கப்படுவது சில நேரங்களில் உயிருக்கே பாதிப்பை ஏற்படுத்தும் சூழலும் உள்ளன. எனவே, ஹோட்டல் மற்றும் உணவை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசையாக பீப் கறியை ஆர்டர் செய்தவருக்கு கரப்பான்பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டலுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மார்க்கெட் சாலை பகுதியில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று காலையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர் பீப் கறி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஒரு சில மணி நேரத்தில் பீப் இறைச்சியும் அவருக்கு பரிமாறப்பட்டுள்ளது.
பசியில் இருந்த அந்த நபரும் பீப் இறைச்சி உணவை வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளார். அப்போது, ஏதோ ஒன்று வித்தியாசமாக தென்படவே அதை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அதில் கரப்பான் பூச்சி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக அதை எடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் காட்டி புகார் கூறியுள்ளார்.
ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, அந்த வாடிக்கையாளர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஹோட்டலில் இருந்த சமையல் அறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்துள்ளது. காலாவதியான உணவுப் பொருட்கள் பலவற்றை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டலுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதத்தையும் அதிகாரிகள் விதித்தனர். ஆசையாக பீப் கறி சாப்பிட வந்தவருக்கு ஹோட்டல் உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications