கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தற்கொலை.. ஆபாச படம் வெளியிட்ட காதலன் கைது.. பகீர் தகவல்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆபாச படம் வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஆதிரா ( 19 ) கடந்த 22 ம்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்தார்..
ஏற்கனவே இதுகுறித்து அவரது காதலன் கேரளாவை சேர்ந்த நிகில் பிரசாத் மீது புகார் அளித்திருந்த நிலையில் தன்னுடன் பழகிய இளைஞர் தன்னை ஏமாற்றி எடுத்த புகைப்படங்களை மார்பிங் செய்து வைத்து மிரட்டுவதாகவும் , ரூ. 10 லட்சம் கேட்பதாகவும் கூறி இருந்தார்..

வழக்கு
இந்த புகார் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.. ஆனால் போலீஸ் விசாரணை நடந்த சமயத்திலும் ஆதிரா மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.. இதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.. இந்த தற்கொலை குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. இது தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன..

செல்போன்
மாணவி புகாரில் தெரிவித்திருந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.. இதற்கிடையே மாணவியின் செல்போன், லேப் டாப்பை ஆய்வு செய்தனர்.. இதில் மாணவியை மிரட்டியதற்கான பல்வேறு புகைப்பட ஆதாரங்கள் , வீடியோக்கள் தொடர்பான தகவல்கள் இருந்தன..

மாணவி பகீர்
தற்கொலைக்கு முன் மாணவி , சம்பந்தப்பட்ட தன் காதலனுக்கு நிகிழ் பிராசத்துக்கு தனது தற்கொலை தொடர்பான தகவல்களை வாட்ஸ் அப் பில் தெரிவித்துள்ளார்.. தனது அறையில் இருந்தவாறு கை நரம்பை அறுத்து ரத்தம் வெளியேறிய நிலையில் அதை வாட்ஸ் அப் மூலம் அந்த இளைஞருக்கு அனுப்பி இருந்தார்..

அதையும் அனுப்பினார்
மேலும் தான் தூக்கில் தொங்க போவதாக கூறி , துப்பட்டா கட்டி இருந்த காட்சியையும் அனுப்பி வைத்து இருந்தார்.. இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் , ஏற்கனவே மாணவி புகார் தெரிவித்திருந்த இளைஞரை தவிர மேலும் ஒரு இளைஞர் மாணவியுடன் பழகி ஏமாற்றி மிரட்டியது தெரிய வந்தது..

விசாரணை
கேரளாவை சேர்ந்த நிகிழ் பிராசத்தை ஹைதராபாத்தில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர்.. அவரை பளுகல் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இந்த இளைஞரின் மொபைல் போனில் இருந்தும் அடிக்கடி மாணவிக்கு , மிரட்டல் படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. அதன் பேரில் இவரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர் .. மேலும் அவரது குடும்பத்தாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்..
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications