Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் எம்பியான விஜய் வசந்த்.. குமரியில் வென்றதும் குடும்பத்தோடு செய்ததை பாருங்க.. நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார். அவர் பாஜக வேட்பாளரான முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் செய்த செயல் நெகிழ வைத்துள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

Vijay vasanth congress kanniyakumari lok sabha election result 2024 lok sabha election 2024 2024

அதன்படி இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்பியாக மீண்டும் களமிறங்கிய திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மொத்தம் 5,46,248 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் மத்திய இணையமைச்சர் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 3,66,341 ஓட்டுகள் பெற்றார். இதனால் விஜய் வசந்த் மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு சீமானின் நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிபர் 3ம் இடம் பிடித்தார். அவர் 52,721 ஓட்டுகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் பசிலியான் 42,393 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்தார்.

இதன்மூலம் விஜய் வசந்த் 2வது முறையாக கன்னியாகுமரி எம்பியாகி உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அவரது தந்தையான வசந்த் அண்ட் கோவின் உரிமையாளர் வசந்தகுமார் பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி எம்பியானார். அதன்பிறகு கொரோனா சமயத்தில் அவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து 2021ல் நடந்த தேர்தலில் தந்தை வசந்த குமாருக்கு பதிலாக மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு பொன் ராதாகிருஷ்ணனை வீழ்த்தி முதல் முறை எம்பியானார். அதன்பிறகு இப்போது 2வது முறையாக எம்பியாகி உள்ளார்.

இந்நிலையில் தான் கன்னியாகுமரியில் எம்பியான பிறகு தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை விஜய் வசந்திடம் தேர்தல் அதிகாரி வழங்கினார். அந்த சான்றிதழை கையில் வாங்கிய விஜய் வசந்த் தனது தாய் ஜெப்ரீன், மனைவி நித்யா, மகன் மகளுடன் தந்தை வசந்தகுமாரின் நினைவிடத்துக்கு சென்றார். அதன்பிறகு வெற்றி சான்றிதழை தனது தாயிடம் வழங்கிய விஜய் வசந்த் தந்தை வசந்தகுமாரின் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார்.

மேலும் அங்கிருந்த வசந்தகுமாரின் போட்டோவின் முன்பு சான்றிதழ் வணங்கினார். அதுமட்டுமின்றி தனது தந்தையின் நினைவிடத்தில் உள்ள வசந்தகுமாரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் நெகிழ்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+