அசத்திவிட்டார்.. விஜய் வசந்தை வியந்து பார்த்த ராகுல் காந்தி.. டெல்லி வரை போன "தகவல்".. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் எம்பி விஜய் வசந்த் நடந்து கொண்ட விதம் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும், ராகுல் காந்தியையும் கவர்ந்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை தீவிரமாக நடந்து வருகிறது. முதல் நாள் இந்த யாத்திரை பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில் .. கடந்த 2 நாட்களாக இந்த யாத்திரைதான் தேசிய அளவில் வைரல் செய்தியாக மாறி உள்ளது.

ராகுல் காந்தியின் டி ஷர்ட் பற்றி பாஜக சமீபத்தில் ட்விட் செய்தது. 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் அவர் டி ஷர்ட் அணிந்து இருப்பதாக விமர்சனம் வைத்தது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினரும், கட்சி சாராத பலரும் மோடியின் சட்டை, கோட், அவரின் கூலிங் கிளாஸ், அவரின் ஷூ, சொகுசு கார் ஆகியவற்றின் விலையை குறிப்பிட்டு பதிலடி கொடுத்தனர்.

விமர்சனம்

விமர்சனம்

இதில் இருந்தே ராகுல் காந்தியின் யாத்திரை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பலரும் இந்த யாத்திரை பற்றி தீவிரமாக இணையத்தில் பேசி வருகிறார்கள். ராகுல் காந்தி யாத்திரையில் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனம் பெற்று வருகிறது. தற்போது ராகுல் காந்தி தமிழ்நாடு எல்லையை கடந்துவிட்டார். அவர் கேரளா உள்ளே நுழைந்து உள்ளார். இன்று 20-30 கிமீ தூரத்திற்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாத்திரை பிளான்

யாத்திரை பிளான்

ராகுல் காந்தியுடன் இன்று 50 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் யாத்திரை செய்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளனர். பல ஊர்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலுடன் பயணம் செய்ய உள்ளனர். மொத்தம் 3750 கிலோமீட்டருக்கு இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இவ்வளவு தூரத்தையும் ராகுல் காந்தி நடந்தே செல்வார். இந்த நடைப்பயணத்தில் ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராகுல் காந்தியுடன் 50 ஆயிரம் பேர் உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் வசந்த்

விஜய் வசந்த்

மிக பிரம்மாண்டமாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 150 நாட்கள் காங்கிரஸ் சார்பாக இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் சிறப்பாக செயல்பட்டாக விஜய் வசந்த் எம்பியை காங்கிரஸ் நிர்வாகிகள் பாராட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையில் எம்பி விஜய் வசந்த் நடந்து கொண்ட விதம் காங்கிரஸ் மூத்த தலைவர்களையும், ராகுல் காந்தியையும் கவர்ந்து உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் வசந்த் தமிழ்நாடு எல்லை வரை நடந்த யாத்திரையில் 3 நாட்களும் ராகுலுடன் இருந்தார்.

ராகுல்

ராகுல்

மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த அவர்.. மிகவும் தன்மையுடன் நடந்துகொண்டு, கிடைத்ததை சாப்பிட்டு, கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி யாத்திரையை மேற்கொண்டார். அரசியலுக்கு இவர் புதிது என்பதால் அவரை பெரும்பாலான வடஇந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாது. ஆனால் இந்த யாத்திரை காரணமாக இவர்கள் விஜய் வசந்துடன் பேசி பழகி உள்ளனர். அவரின் செயலை பார்த்து அசந்து போன அவர்கள்.. விஜய் வசந்தை பாராட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

விஜய் வசந்த் ஏற்பாடு

விஜய் வசந்த் ஏற்பாடு

இந்த நிகழ்விற்கு கூட்டம் ஏற்பாடு செய்ததில் விஜய் வசந்தும் முக்கியமான காரணம். அவரும் தன் பங்கிற்கு 20 ஆயிரம் ஆட்களை இறக்கியதாக கூறப்படுகிறது. இவரின் செயலை பார்த்து ராகுல் காந்தியும் இம்ப்ரஸ் ஆகி உள்ளார் என்கிறார்கள். அதோடு டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் விஜய் வசந்தின் செயல்பாடு பற்றிய தகவல்கள் சென்றுள்ளதாம். நேற்று தமிழ்நாடு பயணம் முடியும் போது விஜய் வசந்த்தை அழைத்து சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தனியாக போட்டோ எடுத்துக்கொண்டனர். அதோடு நன்றாக செயல்படுகிறீர்கள் என்று பாராட்டிவிட்டு சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+