கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வென்று எம்எல்ஏவாக தேர்வானவர் ராஜேஷ்குமார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த இவருக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ராஜேஷ்குமார் எம்எல்ஏவுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 18 எம்.எல்.ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் கேபி அன்பழகன், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிவிட்டனர். கிருஷ்ணகிரி, வேலூர், தொகுதி எம்எல்ஏக்கள் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications