தோட்டத்தில் வந்த சத்தம்.. எதிரே நடந்து வந்த பெண்.. வேகவேகமாக நெருங்கிய இளைஞர்.. அதிர்ந்த கீறிப்பாறை

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞரை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

குமரி: சாலையில் நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து, பாலியல் தொல்லை தந்த இளைஞரை குமரி போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?

குடிபோதையில் நாளுக்கு நாள் இளைஞர்கள் சீரழிந்து வருவதும், அதனால் குற்றங்கள் பெருகி வருவதும் அதிகமாகி கொண்டே வருகிறது... குடிகாரர்களுக்கு பொதுஇடமும் ஒன்றுதான், கல்வி நிலையமும் ஒன்றுதான்.

சென்னை கிண்டி ஐஐடியில் கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது.. இந்த ஐஐடி வளாகத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த இடம் முன்பிருந்தே இப்படித்தான் மண்டிகள் நிறைந்து காணப்படுகிறது..

 ஏறும்மா பைக்கில்

ஏறும்மா பைக்கில்

சென்னையில் 2 மாதமாகவே தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த வளாகத்தில் ஆட்கள் நடமாட்டமும் அவ்வளவாக இருப்பதில்லை. அதிலும் இரவு நேரங்களில் மழை என்பதால், பெரும்பாலும் யாரும் வெளியே வருவதில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அங்கு பயிலும் மாணவி ஒருவர், தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு ஐஐடி வளாகத்தில் உள்ள தன்னுடைய ரூமுக்கு 8 மணிக்கு தனியாக நடந்து சென்றுள்ளார்... அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு இளைஞர், மாணவியிடம் பைக்கை நிறுத்திவிட்டு, "பைக்கில் ஏறும்மா.... மிச்சத்தை அப்புறம் பேசிக்கலாம்" என்று சொல்லி உள்ளார்.

 ஓ இங்கிலீஷ்

ஓ இங்கிலீஷ்

இதை கேட்டு அதிர்ந்து போன மாணவி, அந்த இளைஞரை திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அந்த மாணவிக்கு தமிழ் தெரியாது.. வெளிமாநில மாணவி என்பதால், ஆங்கிலத்தில் இளைஞரை திட்டியிருக்கிறார்.. அந்த இளைஞருக்கோ ஆங்கிலம் தெரியாது.. மாணவி இங்கிலீஷில் பேசியதும், "ஓ.. உனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியுமா" என்று கிண்டலாக கேட்டுவிட்டு, மறுபடியும் அவரது கையை பிடித்து இழுத்து, அவரே தன்னுடைய பைக்கில் ஏற்ற முயன்றுள்ளார்..

 ஹெல்ப் ஹெல்ப்

ஹெல்ப் ஹெல்ப்

ஹெல்ப் ஹெல்ப் என்று கத்தவும்தான், அந்த இளைஞர் அங்கிருந்து நகர்ந்துள்ளார்.. அவரால் பைக்கை ஓட்டவே முடியவில்லையாம். தள்ளாடியபடியே, பைக் ஓட்டி சென்றுள்ளார். இந்த சம்பவம் நடந்து, 2வது நாளே மடிப்பாக்கத்தில் சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரை, போதை ஆசாமி கட்டிப்பிடித்து டார்ச்சர் தந்தார்.. இதனால் அதிர்ந்து போன அந்த பெண், அந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.. உடனே அந்த இளைஞர் ஆத்திரம் அதிகமாகி, பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டார்.. இதில் நிலைதடுமாறி அந்த பெண் கீழே விழுந்ததால், உடனே இளைஞரும், அந்த பெண்ணின் மீது படுத்து, அவரை விடாமல் சீண்டி தாக்கினார்.

 தோட்டம்

தோட்டம்

அங்கிருந்த கேமராவில் இதுவும் பதிவாகிவிட்டது. கடைசியில் அவர் யார் என்று பார்த்தால், வேளச்சேரியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பதும், இவர் ஒரு தனியார் காலேஜில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இவர் கைதாகும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் இவரை அடையாளம் கண்டு, விக்கித்து போனார்கள். இதோ இன்னொரு போதை ஆசாமி கன்னியாகுமரியில் அட்டகாசம் செய்துள்ளார்.. கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகம் உள்ளது. ரப்பர் தோட்டங்கள் மற்றும் எஸ்டேட்கள் நிறைந்த பகுதியில் ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்காக லோயர் காலனி இருக்கிறது..

 திடீர் முத்தம்

திடீர் முத்தம்

இங்கே இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து தண்ணி அடிப்பது வழக்கம்.. போதையில் தகராறுகளும் நடக்கும்.. இந்த வழியாக 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுள்ளார்... அப்போது ஜெரால்டு என்ற இளைஞர், நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார். நண்பர்களுக்குள் ஒரு போட்டி வைத்துள்ளார்கள். அந்த வழியாக எந்த பெண் கடந்து சென்றாலும், அவர்களுக்கு முத்தம் தர வேண்டும் என்பதுதான் போட்டியாம்.. அப்போதுதான், இந்த பெண் வந்துள்ளார்.. போதை தலைக்கேறிய ஜெரால்டு ஓடிவந்து, இந்த பெண்ணை வலுகட்டாயமாக இழுத்து முத்தமிட்டு சீண்டி உள்ளார்..

 எட்டாக்கனி

எட்டாக்கனி

இதனால் அலறி கூச்சலிட்ட அந்த பெண், மன உளைச்சலுக்கு ஆளாகி கீரிப்பாளையம் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும், ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், ஜெரால்டு எஸ்கேப்.. அவரை இப்போது தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. நாளுக்கு நாள், மது போதை காரணமாக குற்றங்கள் பெருகி வரும்நிலையில், மதுவிலக்கு என்பது எட்டா கனியாகிவிட்டதோ? என்ற ஏக்கக்குரல்கள் தமிழகத்தில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+