"விஷப்பெண்".. ஈரக்குலையே நடுங்கிடுச்சே.. போலீசுக்கு தெறித்து ஓடிய மாப்பிள்ளை.. கடைசியில் பார்த்தால்?
கணவனை கொலை செய்ய இளம்பெண் திட்டம் தீட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது
கன்னியாகுமரி: ஈரக்கொலையே நடுங்கும் அளவுக்கு குமரியில் பகீர் சம்பவங்கள் நடந்து வருகின்றன.. அதிலும் சில இளம்பெண்களின் குரூரங்கள் சமீபகாலமாகவே வெளிப்பட்டு வருகிறது.. இன்னொரு கொடுமையும் குமரியில் நடந்துள்ளது.
இரணியல் பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர் வடிவேல் முருகன்.. சமீபத்தில்தான் திருமணமாகி உள்ளது.. ஆனால், புதுமாப்பிள்ளை போலவே அவர் காணப்படவில்லை.
எப்ப பார்த்தாலும் உடல்நலம் குன்றியே காணப்பட்டார்.. ஒருநாள் திடீரென கீழே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார் வடிவேல்.. இதற்கு பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை தந்துள்ளனர்.. உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்துள்ளார்..

புது பொண்டாட்டி
அப்போதும் திடீர் திடீர் என மயங்கி விழுந்து கொண்டேயிருந்தார்.. சில சமயம் வாந்தி எடுத்துள்ளார்.. வயிற்று வலியாலும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.. அப்போதுதான், புது பொண்டாட்டி சுஜாதா மீது சந்தேகம் வந்துள்ளது.. சந்தேகம் இருந்தாலும் அதை உடனடியாக கேட்கவில்லை.. மெல்ல அவரை கண்காணிக்க துவங்கினார்... ஏற்கனவே சுஜாதா ஒருவரை காதலித்து வந்ததை, வடிவேலுவிடம் சொல்லி உள்ளதால், அது விஷயமாகவும் வடிவேலுக்கு சந்தேகம் கிளம்பியது..

அய்யோ சுஜாதா
சில வருடங்களுக்கு முன்பு ஒரு இளைஞரை சுஜாதா காதலித்து வந்ததாகவும், அவரோடு இப்போது எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சுஜாதா சொல்லியிருந்தாலும், அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றம் உள்ளதையும் வடிவேலு கவனித்துள்ளார். அப்போதுதான், சுஜாதாவின் செல்போன் மெசேஜை பார்க்க நேர்ந்துள்ளது.. அதில், முன்னாள் காதலனுடன் சுஜாதாவுடன் இன்னமும் தொடர்பில் இருந்தது உறுதியானது... அந்த மெசேஜ்களை வடிவேலு படித்து பார்த்து அதிர்ந்தே போய்விட்டார்..

பிளான்கள்
காரணம், வடிவேலுவை போட்டுத்தள்ள, இந்த கள்ளக்காதல் ஜோடிகள் நிறைய பிளான்களை போட்டிருந்தது பதிவாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, உடல்நலம் சரியில்லாததால், தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும்நிலையில், அந்த மருந்துக்கு பதிலாக ஸ்லோ பாயிசன் கலந்து வைத்துவிடலாம் என்றும், இறப்புக்கு அந்த டாக்டர் தந்த மருந்துதான் என்றும் சொல்லிவிடலாம் என்று சுஜாதாவே, காதலனிடம் ஐடியாவை சொல்லி உள்ளார்..

வீடியோ கால்
இதெல்லாம் பார்த்து நிலைகுலைந்து போன வடிவேலு, நேராக இரணியல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.. மனைவி மற்றும் அவரது முன்னாள் காதலனின் வாட்ஸ் ஆப் உரையாடல்களின் க்ரீன் ஷாட்டுகளையும் போலீசில் தந்தார்.. ஆனாலும், வடிவேலுக்கு மனம் ஆறவேயில்லை.. மனைவியே தனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்துவிடுவது தொடர்பாக வீடியோ கால் ஒன்றை பேசி, அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த வீடியோவில் வடிவேலு பேசிஉள்ளதாவது:

பாய்சன் சுஜாதா
"எனக்கும் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. திருமணத்திற்கு பின் நாங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.. ஆனால் அவள் நடித்துக் கொண்டு இருந்திருக்கிறாள் என்பது பிறகுதான் எனக்கு தெரியவந்தது.. என் மனைவி கல்யாணத்துக்கு முன்பு ஒருவரை காதலித்திருக்கிறாள்.. அவள் செல்போனை யதேச்சையாக பார்த்தபோதுதான், இப்போதும் அந்த காதலனுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது... அந்த தொடர்பை வலுப்படுத்த "ஸ்லோ பாய்சன்" கொடுத்து என்னை கொல்ல பார்க்கிறாள். அதற்கான சாட்சிகள் என்னிடம் இருக்கிறது.. அதை பார்த்ததால்தான் நான் இப்போது உயிருடன் இருக்கிறேன்..

ஸ்லோ பாய்சன்
இல்லாவிட்டால், ஸ்லோ பாய்சன் கொடுத்து என்னை எப்பவோ கொன்று விட்டு தற்கொலை செய்ததாக சொல்லியும் இருப்பாள்.. இல்லாவிட்டால், அந்த மருந்தின் வீரியத்தில் நான் ஏதாவது விபத்தில் சிக்கி இறந்திருப்பேன். ஆனால் இது எதுவும் நடக்காதது போல் என் மனைவி இருக்கிறாள்... இது குறித்து போலீசில் புகார் தந்திருக்கிறேன்.. போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை... ஏன் என்றும் தெரியவில்லை... போலீசார் நடவடிக்கை எடுத்து ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து, அந்த பெண், தன்னுடைய காதலனுடன் பேசிய வாட்ஸ்ப் மெசேஜ்களையும் வடிவேலு பதிவிட்டுள்ளார்..
சுஜாதா: அது செக் பண்ணும்போது டேப்லட் சாப்பிட்டிருக்குன்னு தெரியாதுல்ல
காதலன்: ஏதும் வந்தா மருந்து மேல போட்டுரலாம்
சுஜாதா: இப்போ வேற எல்லா இடத்திலேயும் காதலன் காதலியை கொல பண்றான், காதலி காதலன கொல செய்யுறா, இதையும் அந்தமாதிரி நெனச்சி விசாரிச்சிற கூடாது
காதலன்: ஆமாமா, அத பாத்தாலும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு
சுஜாதா: தல சுத்திட்டி ஒரு மாதிரி இருந்தான், மயங்கல
காதலன்: கண்டினியூ பண்ணினா கான்சியஸ் இல்லாம ஆகும்.. ரொம்ப பண்ணுன்னா... எல்லாத்தையும் கலந்து கொடுத்துடு, மொத்தமா போகட்டும், வரத பார்த்துக்கலாம்"
இப்படி போகிறது அந்த உரையாடல்... நாளுக்கு நாள் நடப்பதை எல்லாம் பார்த்து, தலைமேல் கை வைத்து, அப்படியே இடிந்து போய் உட்கார்ந்துள்ளனர் பொதுமக்கள்... என்னத்த சொல்றது???

கணவர்
குமரியில் என்ன நடக்கிறதென்றே குழம்பி போய் உள்ளார்கள் பொதுமக்கள்.. நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்தது.. மனைவியை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு போயுள்ளார் கணவர்.. ஆனால், மனைவியோ ஏகப்பட்ட ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்து ஊர்சுற்றி வந்துள்ளார்.. ஒருமுறை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியபோது, மனைவியின் இந்த நடவடிக்கையை கண்டு கணவர் அதிர்ந்துள்ளார்.. அதற்கு பிறகு வெளிநாட்டுக்கும் போகாமல் குமரியிலேயே தங்கிவிட்டார்.. இதனால் கடுப்பான மனைவி, கணவன் தூங்கும்போது, சுடுதண்ணீரை கொதிக்க வைத்து கொண்டு வந்து ஊற்றிவிட்டார்.. "இப்படியே எனக்கு தொந்தரவாக வீட்டில் இருந்தால், எண்ணெய்யை கொதிக்க வைத்து ஊற்றி கொன்று விடுவேன்" என்று கணவரை மிரட்டினார்.. அந்த அப்பாவி கணவர் இப்போது ஆஸ்பத்திரியில் சீரியஸாக இருக்கிறார்.

அட்மிட்
ஆனால், வடிவேலு விஷயத்தில், முன்கூட்டியே அவர் சுதாரித்து கொண்டார்.. இதில் கொடுமை என்னவென்றால், வடிவேலுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்ததால், தக்கலையில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் இருந்து மருந்து வாங்கி வந்துள்ளார்.. அதை தினமும் குடிக்க தருவது சுஜாதானாம்.. அப்படி தினமும் மருந்து தரும்போது, அதில், ஸ்லோ பாய்சனை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து தந்துள்ளதும் தெரியவந்திருக்கிறது.. அதற்கு சுஜாதாவின் பிறகுதான் செல்போனை எடுத்து பார்த்து கண்டுபிடித்துள்ளார்.. ஒருமுறை, இறச்சகுளத்தில் உள்ள சுஜாதா வீட்டுக்கு விருந்துக்கு சென்றபோதுதான், இந்த விஷயம் தொடர்பாக வடிவேலுக்கு சந்தேகம் வந்ததாகவும், அதைவைத்து தகராறு ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.. கலிகாலம்..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications