மேடையில் மயங்கிய மணப்பெண்.. தோளில் தூக்கி கொண்டு ஓடிய மாப்பிள்ளை.. பரோட்டோ மாஸ்டர் செஞ்சது ஹைலைட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமண வீட்டில் மாப்பிள்ளை விருந்தில், பெண் வீட்டாருக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. மணப்பெண் மயக்கம் அடைந்த நிலையில், திருமண மண்டபத்தில் ஜன்னல் கண்ணாடிகள், பிளாஸ்டிக் சேர்கள் உடைக்கப்பட்டது.போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
திருமண மண்டபங்களில் மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் ஏதாவது ஒரு காரணத்தின் பேரில் திடீரென சண்டை நடந்துவிடும். சாப்பாடு பிரச்சனையாக இருக்கலாம் அல்லது சரக்கு பிரச்சனையாக இருக்கலாம். இல்லாவிட்டால் சரக்கு அடித்தவர்களால் பிரச்சனையாக இருக்கலாம். சண்டையில் முடியாமல் திருமணம் நடந்தால் தான் மணப்பெண் வீட்டுக்கும், மணமகன் வீட்டுக்கும் நிம்மதியாக இருக்கும்.

ஆனால் நிலைமை அவ்வாறாக இல்லை. திருமண வீடுகளில் இரவில் நடக்கும் பார்டி அல்லது குடிபோதை விருந்துகளால் சண்டைகள் அதிகமாகி வருகின்றன. அப்படி ஒரு சண்டையால் நாகர்கோலில் ஒரு திருமண வீடு கொஞ்ச நேரத்தில் போர்க்களம் ஆனது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், ராஜமங்கலம்துரை பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், அதற்கான விருந்து உபசரணைகள் நேற்று இரவில் நடைபெற்றது.

அப்போது மகள் வீட்டாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் மது போதையில் குத்தாட்டம் ஆடியதுடன், மணமகளின் உறவினர்களின் பெண்கள் மீது மோதியுள்னர். இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் தரப்பினர், குத்தாட்டம் ஆடி வாலிபர்களை அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது திருமண மண்டபத்தின் ஜன்னல் கண்ணடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. பிளாஸ்டிக் சேர்களும் அடித்து உடைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டார் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே மணப்பெண் மயக்கம் அடைந்துள்ளார். அவரை மணமகன் தனது தோளில் தூக்கி கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இப்படி திருமண மண்டபமே போர்களம் ஆகிய நிலையில், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று அங்கிருந்த பரோட்டா மாஸ்டர் மற்றும் சமையல் குழுவினர் புரோட்டாவை தட்டி போட்டபடி சமையல் செய்து கொண்டிருந்தனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications