இல்ல.. புரியல.. மீண்டும் குழப்பியடிக்கும் பிரேமலதா.. கடுப்பில் கழகங்கள்
கன்னியாகுமரி: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என்று 4 முனை போட்டி நிலவுகிறது. கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஒரு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியை அறிவிக்காமல் உள்ளனர். தேமுதிக கூட்டணி பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் கூட்டணி குறித்து மேலும் குழப்பும் வகையில் பிரேமலதா, "எங்களுக்கு அனைத்துக் கட்சிகளும் தோழமை கட்சி தான். ஆளும், ஆண்ட கட்சிக்கு தேமுதிக சிம்ம சொப்பனமாக உள்ளோம்" என்று கூறியுள்ளார். இது திமுக, அதிமுகவினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம், "இந்த பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு முக்கியமானது. நிர்மலா சீதாராமன் 9வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார். ஒரு பெண்ணாக நிதி அமைச்சருக்கு என் வாழ்த்துகள். தமிழ்நாட்டிற்கு ரயில்வே பாதைகள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. விவசாயத்திற்கு ரூ.40,000 கோடி ஒதுக்கியுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பட்ஜெட் கருத்து
ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு உள்ளது. ஜவுளி பூங்கா அமைப்போம் என்று அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஏஐ தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதாக சொல்லியிருப்பதையும் அறிவித்துள்ளோம். மற்ற மாநிலங்களுக்கு நதிகள் இணைப்பைப் பற்றி சொல்லியுள்ளார்கள். தமிழ்நாட்டின் நீர் மேலாண்மை வளர்ச்சி பற்றி எதையும் அறிவிக்காதது நிச்சயம் ஏமாற்றமளிக்கிறது.
ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு வரிகளில் இருந்து விலக்களித்து குறு, சிறு நிறுவனங்களை பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தியாவின் பொருளாதாரம் தினம் தோறும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் விலை தொடங்கி அத்தியாவசிய பொருட்களின் விலை எங்கேயோ உயர்ந்துவிட்டது.
கூட்டணி முடிவா
விலை வாசியை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் நேரம் என்பதால் நிறைய திட்டங்களை எதிர்பார்த்தோம். ஆனால் இந்த பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொரி என்பதை போல தான் மக்கள் பார்க்கிறார்கள். இங்கு மக்கள் தான் எஜமானர்கள். விவசாயம், நெசவு, மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு நிறைய எதிர்பார்த்தோம். பட்ஜெட்டில் வரவேற்பு, ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கிறது.
ஏற்கனவே சட்டமன்ற தேர்தல்களில் கேப்டன், நான், விஜய பிரபாகரன் போட்டியிட்டுள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நானும் போட்டியிடுவேன். இறுதி வடிவத்தை எந்த கூட்டணியும் அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்த பிறகு என் கருத்தை கூறுகிறேன். விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிகம் வெளியில் வரவில்லை. அதைப்பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்.
சிம்ம சொப்பனம்
தமிழ்நாட்டின் உள்ள அனைத்துக் கட்சிகளும் எங்கள் தோழமை கட்சி தான். கூட்டணி குறித்து மாவட்ட செயலாயர்கள், தொண்டர்களுடன் ஆலோசித்து அறிவிப்போம். தமிழ்நாட்டில் அனைத்து பூத் கமிட்டி அமைத்து 3வது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் கூட்டணியில் இடம் பெறுவோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆளும், ஆண்ட கட்சிக்கு தேமுதிக சிம்ம சொப்பனமாக உள்ளது" என்றார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 கூட்டணிகளுடனுமே தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முடிவை அறிவிக்காமல் குட்டையை குழப்பது போல அவர் பேசுவது திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications