Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குமரி அருகே கடற்கரையோரம் துள்ளிக்குதித்த டால்பின்கள்! வியப்போடு படம்பிடித்த இளசுகள்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடற்கரையில் 40-க்கும் மேற்பட்ட டால்பின்கள் துள்ளிக்குதித்ததை அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமுடன் படம்பிடித்து மகிழ்ந்தனர்.

கோவளம் கடற்கரையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் ஓங்கல் வகையை சேர்ந்த டால்பின்கள் அதிகம் உலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு காரணமாக கோவளம் கடற்கரை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குமரி மாவட்டம்

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கடற்கரையில் நேற்று மாலை திடீரென 40-க்கும் மேற்பட்ட டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளிக்குதித்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதி மீனவ இளைஞர்கள் இதனை ஆர்வமுடன் படம் பிடித்ததுடன் டால்பின்கள் எதற்காக கரையை ஒட்டி வந்து இப்படி குதிக்கின்றன என யோசித்திருக்கின்றனர். அப்போது வந்த அலையில் இறந்த நிலையில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியிருக்கிறது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இதையடுத்து இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள், உயிரிழந்த டால்பினை ஆய்வு செய்திருக்கின்றனர். அதில் இறந்த டால்பின் 6 அடி நீளத்திலும் 150 கிலோ எடையிலும் இருந்திருக்கிறது. மேலும், இதுக்குறித்து வனச்சரகருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் அவரும் அங்கு விரைந்தார். டால்பின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என ஆராய திட்டமிட்ட அவர் கால்நடை மருத்துவரை வரவழைத்து பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுத்தார்.

முடிவு வரவில்லை

முடிவு வரவில்லை

உயிரிழந்த டால்பினின் உடற்கூராய்வு முடிவு இன்னும் வராத நிலையில் அது உடனடியாக கடற்கரையிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஒரு டால்பின் இறந்ததால் தான் மற்ற டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளிக்குதித்திருக்க கூடுமோ என மீனவர்கள் விவாதித்து வருகின்றனர். உயிரிழந்த டால்பின் ஓங்கல் வகையை சார்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

வழக்கமாக ஞயிற்றுக்கிழமைகளில் கோவளம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவர். நேற்று முழு ஊரடங்கு காரணமாக கடற்கரையே வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆழ்கடல் பகுதிகளில் மட்டுமே காணமுடியக் கூடிய டால்பின்களை கடற்கரையோரம் கண்டதால் இது குறித்தே மீனவர்கள் மத்தியில் பேசு பொருளாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+