விஷம் சாப்பிட்டேன்.. செத்துடுவேன் போல இருக்கு.. எப்படியாவது காப்பாத்திடு.. மனைவியிடம் கெஞ்சிய கணவர்
விஷ மாத்திரை சாப்பிட்ட போதை நபர் பரிதாபமாக உயிரிழந்தார்
கன்னியாகுமரி: "விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. நான் செத்துடுவேன் போல இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று மனைவியிடம் கெஞ்சிய போதை கணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதி திக்குறிச்சி வாளைவிளை. இங்கு வசித்து வருபவர் ராஜேந்திரன்.. 55 வயதாகிறது.. ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.. நிர்மலா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேருமே வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்கள்.

ராஜேந்திரன் தினமும் தண்ணி அடிப்பவராம்.. அப்படி தண்ணி அடித்துவிட்டால், வீட்டில் நிர்மலாவிடம் சண்டை போடாமல் இருக்கவே மாட்டாராம். ஒவ்வொரு முறை சண்டை போடும்போதெல்லாம், "உன்கூட இருப்பதைவிட, சாகறதே மேல்" என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாராம். விடிந்ததும்.. போதை தெளிந்து சண்டையையும் மறந்துவிடுவாராம்.
இப்படித்தான், நேற்று மதியமே ராஜேந்திரன் ஃபுல் போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்குள் போனவர், திடீரென "நான் போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. செத்து விடுவேன் போல் இருக்கு.. என்னை எப்படியாவது காப்பாத்தும்மா" என்று சொல்லி கொண்டே மயங்கி விழுந்துவிட்டார்.
இதனால் பதறி போன நிர்மலா, கணவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்... பிறகு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜேந்திரன் என்ன மாத்திரை சாப்பிட்டார், ஏன் சாப்பிட்டார், என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். போதையில் விஷ மாத்திரை சாப்பிட்டு, கடைசி நேரத்தில் காப்பாற்றுமாறு மனைவியிடம் கெஞ்சிய கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications