படித்த பள்ளிக்கே ஹெட் மாஸ்டர்.. மலை கிராமத்தில் பிறந்து சாதித்த பழங்குடி பெண் ஷீலா..குமரியில் நெகிழ்ச்சி
குமரி: குமரி மாவட்டத்தில், தான் படித்த பள்ளிக்கே தலைமை ஆசிரியையாக பழங்குடியின பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஷீலா என்ற பெண், மனம் ததும்ப இது பற்றி பேசியுள்ளார். மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, தற்போது அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்ததை, எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார் அந்த பெண் ஷீலா.
எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் கல்வி ஒருவரை உயரத்தில் கொண்டு வைத்துவிடும் என்பதற்கு பல்வேறு சான்றுகளை பார்த்து இருப்போம். அப்படித்தான் குமரி மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவர் தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார். மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, தற்போது அதே பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்ததை, என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார் அந்த பெண் ஷீலா.

பழங்குடியின பெண்
கல்வியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்தக்காட்டாக திகழும் ஷீலா என்ற பழங்குடியின பெண் குமரி மாவட்டத்தின் மலை கிராமங்களில் ஒன்றான பேணு தான் அவரது சொந்த ஊர். எப்படியாவது படிக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்துள்ளது. இதற்காக அங்கிருந்து நடையாக நடந்து சென்று பத்துகாணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் படித்தார்.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஷீலாவுக்கு ஆசிரியை வேலை கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றிய அவர் பின்னர் சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் பெற்று வந்துள்ளார். வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றினார். இதனை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டார்.
ஆனந்த கண்ணீரோடு பேச்சு
இந்த நிலையில் தான் தற்போது தான் படித்த பத்துக்காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்விக்கு தலைமை ஆசிரியையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியையாக வந்ததை நினைத்து ஆனந்த கண்ணீரோடு இதை என் பாக்கியமாக கருதுவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:-
"என் சொந்த ஊர் பேணு மலைப்பகுதி. நான் பிறந்திருந்த போது எங்கள் ஊரில் மின்சாரம் கிடையாது. போக்குவரத்து வசதிகள் கிடையாது. ஆனாலும் எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்காக பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பத்துகானி பள்ளிக்கு நான் நடந்து சென்று தான் படித்து வந்தேன்.
வீட்டு வந்த பிறகு, மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் படிப்பேன். அந்த காலங்களில் மலைப்பகுதியில் இருந்து நகரங்களுக்கு சென்று படிப்பது என்பது மிகவும் குறைவு. ஆனாலும் நான் கல்வியை விடக்காது என்பதற்காக போராடி தொடர்ந்து உயர் கல்வியையும் படித்தேன். இதனால் எனக்கு அப்போது அரசு பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது.
கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று தெரியாது
இப்போது நான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியையாக பணியாற்றுவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இது எனது பாக்கியமாக கருதுகிறேன். ஒரு சிலருக்கு தான் இது போன்று கிடைக்கும். அதில் நானும் ஒருவர் என்பது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது கல்வி துறையில் ஏராளமான மாற்றங்கள் வந்துள்ளன. நான் படித்த காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியாது.
ஆனால் தற்போது மாணவர்களுக்கு கம்ப்யூட்டரில் படிக்க வாய்ப்பு கிடைப்பதை பார்த்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். தான் படித்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக, பழங்குடியின பெண் ஷீலா பொறுப்பேற்ற சம்பவத்தை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications