கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்களுக்கு குட்நியூஸ்.. நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க 50 சதவீத மானியம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள்) 10 நாட்டுக்கோழிப்பண்ணை நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் நாட்டு கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீத மானியம் மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத பங்களிப்பை வங்கி மூலமாகவோ, தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளிகள் திரட்ட வேண்டும்.
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படும். தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம், தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள், 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்பு தொழில் செய்துவரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவுசெய்து அரசு மானிய திட்டங்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மீன்வள விவசாயிகள் நிலையான மீன்வளர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ளவும், மீன்குஞ்சுகளின் செலவினத்தை குறைக்கவும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு பெற்ற மீன்பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 2½ ஏக்கருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
ஆகவே வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்து உள்ளீட்டு மானியத்தினை பெற்று பயனடையலாம். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள், விண்ணப்பங்கள் பெற காட்பாடி காந்திநகரில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை வேலை நாட்களில் நேரில் அணுகலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications