அரசு பஸ்ஸில் "டூல்ஸ் பாக்ஸ்.. அப்பதான் கீழே இறங்க போனாரு கண்டக்டர்.. விக்கித்து நின்ற கன்னியாகுமரி
கன்னியாகுமரி: 500 ரூபாய் நோட்டுக்கள், கன்னியாகுமரி மாவட்டத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிவிட்டது.. இன்னமும் இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரியை பொறுத்தவரை இது ஒரு சுற்றுலா தலம்.. பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,பஸ்களிலும், பல்வேறு வாகனங்களிலும் வந்துசெல்கிறார்கள்..

தற்போது, 4 நாட்கள் லீவு என்பதால், சுற்றுலா பயணிகளின் நெரிசல் அதிகமாகவே காணப்பட்டது.. இந்நிலையில் நேற்று, பெங்களூரில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், கன்னியாகுமரிக்கு வந்தது. பஸ்சில் இருந்து எல்லா பயணிகளும் இறங்கவிடவும், கடைசியாக டிரைவர், கண்டக்டரும் கிளம்ப தயாரானார்கள்..
பழுது உபகரணங்கள்: அப்போது, பஸ்ஸில் வேறு யாராவது இருக்கிறார்களா? அல்லது உடமைகளை விட்டு சென்றுள்ளார்களா? என்று சோதனை செய்திருக்கிறார்கள். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு பக்கத்தில், டூல்ஸ் பாக்ஸ் (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) இருந்துள்ளது.. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. அதனை எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருந்ததாம்.
எனவே, இதுகுறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தரப்படவும், அவர்கள் விரைந்து வந்தனர். அந்த பாக்ஸ் யாருடையது என்று தெரியவில்லை.. தவறுதலாக விட்டுச் சென்றுவிட்டார்களா? அல்லது தவறான வழியில் வந்த பணமா? என்றெல்லாம் உடனடியாக தெரியவில்லை. அதனால், கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.
2 லட்சம் ரூபாய்: அந்த நேரம்பார்த்து, ஒரு இளைஞர் அதே பஸ்ஸுக்குள் ஏறினார்.. தான் பஸ்சில் வந்தபோது, தன்னுடைய சிம்கார்டை தொலைத்துவிட்டதாக சொல்லி, பஸ்சுக்குள் ஏறி தேட துவங்கினார். அப்போது அங்கிருந்த எல்லா போலீசுக்குமே, இந்த இளைஞர் மீது சந்தேகம் வந்தது. இறுதியில், வேறுவழியில்லாமல், 2 லட்சம் ரூபாய் பணத்தை, பஸ்ஸில் மறந்துவிட்டுவிட்டு இறங்கிவிட்டதாக போலீசாரிடம் சொன்னார்.

அப்போதும் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இந்த பணம் உண்மையிலேயே அவருடையதா? என்று தெரியவில்லை என்பதால், கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும், அந்த நபரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்..
விசாரணை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு சாமி கும்பிட அந்த இளைஞர் வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அது அவருடைய பணம்தானா? என்பது இன்னும் நிரூபணமாகவில்லை.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications