கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கிய விவகாரம்... அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : நாகர்கோவிலில் நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட புகாரில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    நரிக்குறவர்களை நடுவழியில் இறக்கிய விவகாரம்... அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

    அரசுப் பேருந்தில் ஏறிய நரிக்குறவர்கள் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டதால் நடத்துனர் அவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அடேங்கப்பா.. அரசு பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. என்ன தெரியுமா? அடேங்கப்பா.. அரசு பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. என்ன தெரியுமா?

    பேருந்தில் சண்டை, கூச்சல்

    பேருந்தில் சண்டை, கூச்சல்

    கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியூரில் வசித்து வரும் நறிக்குறவர்கள் வழக்கமாக நாகர்கோவிலுக்கு வந்து செல்வார்கள். அவர்கள் குடிசைத் தொழிலாக செய்து வரும் ஊசி, பாசிகளை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடம் விற்பது வழக்கம். ஊசி, பாசி விற்பது மட்டுமே தங்கள் வயிற்றை நிரப்பும் என்பதால் மாலை வரை பேருந்து நிலையத்திலேயே இருந்து விற்பனை செய்துவிட்டு பின்னர் நெல்லை செல்லும் பேருந்துகளில் வள்ளியூருக்கு செல்வது வழக்கம். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நிகழும் என கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பேருந்தில் பயணம் செய்த இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை வந்துள்ளது. அதனால் சத்தம் போட்டு பேசியுள்ளனர்.

    நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்

    நடுவழியில் இறக்கி விடப்பட்டனர்

    இது பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும் என கருதிய நடத்துநர் அவர்களை சத்தம் போட்டு நடுவழியிலேயே இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு குழந்தை, முதியவர், பெண் என 3 பேர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தை அங்கிருக்கும் ஒருவர் வீடியோ எடுத்து வைரலாக்க அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகிவிட்டது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவு பிறப்பித்தார்.

    திமுக எம்பி கனிமொழி கண்டனம்

    திமுக எம்பி கனிமொழி கண்டனம்

    இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள் அதிரவைக்கிறது. அனைவரும் சமம் என்ற கொள்கை உடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறும் போது, அரசு அலுவலர்களே இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது. சுயமரியாதை, சமத்துவம் ஆகிய சமூக நீதிக் கொள்கைகளை அனைவருமே நெஞ்சில் ஏந்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    நடத்துநர், ஓட்டுநர் இடைநீக்கம்

    நடத்துநர், ஓட்டுநர் இடைநீக்கம்

    இதற்கிடையே நரிக்குறவர்களை நடுவழியில் பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட புகாரில் அந்த பேருந்தின் ஓட்டுநர் நெல்சன், நடத்துநர் ஜெயதாஸ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான உத்தரவை அரசுப் போக்குவரத்து நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பிறப்பித்தார். சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒரு பெண் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இந்த விஷயத்தை கேள்விபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காக கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    English summary
    The driver and conductor of a govt bus have been suspended for dropped off the passengers halfway in nagercoil
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X