தேசிய நெடுஞ்சாலையில் ஆளையே தூக்கிப்போகும் காற்று...குலாப் புயலால் குமரியை மிரட்டிய மழை - வெதர்மேன்
சுழன்றடித்த காற்றினால் நெல்லை, குமரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் தடுமாறித்தான் போனார்கள்.
கன்னியாகுமரி: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திருச்செந்தூரில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குலாப் புயலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. குலாப் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திரா, ஒடிஷாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

வங்க கடலில் இரு தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயல் சின்னமாக வலுப்பெற்றது. குலாப் என்று பெயரிடப்பட்ட அந்த புயல் ஞாயிறன்று கரையைக் கடந்தது.
குலாப் புயல் காரணமாக தென் தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாது கொட்டிய மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மதுரை, திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைகளில் பலத்த காற்று வீசியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளானதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருச்செந்தூர் கடலோரத்தல் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசியது. கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் மணிக்கு 52 கிலோமீட்டர் வேகத்திலும் தூத்துக்குடியில் மணிக்கு 46 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசியது. மதுரையில் மணிக்கு 37 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும் தனது ட்விட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான்.
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடியில் சதமடித்தது என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குலாப் புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. தென் தமிழகம் டெல்டாவில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications